ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

View previous topic View next topic Go down

ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by goodcitizn on Mon Sep 08, 2014 1:59 pm

ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

உள்ள வயிரத்த ஒளிச்சு வெச்சு
வெளிய கரித்துண்டா வாள வெச்சு
புள்ள நீ பொளச்சுப் போடினு சொன்னா
புரியலையே உம் பேச்சு, மாரியாத்தா!

பொத்தக் குடிசையில குடியேற வெச்சு
பொம்பளைக கூசாம என்னை ஏச வெச்சு
ஒத்தச் சேலையில ஒளப்பாட வெச்ச
ஒனக்கே அது நியாயமா, மாரியாத்தா?

அப்பனும் இல்ல ஆத்தாளும் இல்ல
அடிச்சுப் போட்டா கேப்பாரும் இல்ல
குப்பையக் கெளறி குறுணையப் பொறுக்க
கோளியாநான் நீ சொல்லு, மாரியாத்தா!

ஒத்தரும் இங்க ஒதவாமப் போக
ஒருவாரமா எனக்கு சித்தாளு வேல
கொத்தனாரு ராயப்பன் கூசாம வந்து
கட்டிலுக்கு வாடீன்னான், மாரியாத்தா!

பொச்சப் பொத்திட்டுப் போனு சொன்னேன்
பொசுக்குனு என்கையை ஒருபிடி பிடிச்சான்
மிச்சத்த நெனச்சால கண்ணீரு முண்டுது
மகமாயி, பெரியதாயி, எம் மாரியாத்தா!

ஒத்தக் கை எம்மேல ஒரசிட்ட தால
ரத்தக் கை நான் வெச்சேன், மாரியாத்தா
குத்திக் குதறிக் கூறேடுததுப் போட்டேன்
எங்கப்பன் அருவாளு, மாரியாத்தா!

சவத்தப் பொதச்சிட்டேன், மாரியாத்தா - ரத்த
சேலையயும் அலசிப்புட்டேன், மாரியாத்தா
வெவரங் கெட்டுப் போனாலும், மாரியாத்தா - நான்
வெக்கங் கெட்டுப் போவலையே, மாரியாத்தா!

தள்ளி ஒரு கெணறு உண்டு, மாரியாத்தா - நான்
தூக்குப் போடக் கயிறு உண்டு, மாரியாத்தா
கொள்ளி வெக்க நாதி இல்ல, மாரியாத்தா - என்னைக்
கொன்னாத் தான் லாபம் என்ன, மாரியாத்தா?

கூறுகெட்ட கொத்தனாரு, மாரியாத்தா - என்னைக்
கொலைகாரி ஆக்கிப் புட்டான், மாரியாத்தா
ஊரு விட்டு ஊரு போறேன், மாரியாத்தா - என்னை
உருப்படியா பாத்துக்க, மாரியாத்தா!

வயிரத்த உள்ள வெச்ச, மாரியாத்தா - ஒரு
கரித்துண்டா வாள வெச்ச, மாரியாத்தா
வயிறெரிஞ்ச வெப்பத்துல, மாரியாத்தா - அந்தக்
கரித்துண்டும் வயிரமாச்சு, மாரியாத்தா!

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by Guest on Mon Sep 08, 2014 2:04 pm

nice!!! loved the font color choices.

Guest
Guest


Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by FluteHolder on Mon Sep 08, 2014 2:58 pm

What is the meaning of 'ஒளப்பாட' ? 


Is it struggle?

FluteHolder

Posts : 1734
Join date : 2011-06-03

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by bw on Mon Sep 08, 2014 6:10 pm

olam = lament?

bw

Posts : 2922
Join date : 2012-11-15

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by goodcitizn on Mon Sep 08, 2014 9:20 pm

FluteHolder wrote:What is the meaning of 'ஒளப்பாட' ? 


Is it struggle?

It is most likely a colloquialized version of uzhaikka.

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by goodcitizn on Mon Sep 08, 2014 9:21 pm

bw wrote:olam = lament?

Yes.

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by MaxEntropy_Man on Tue Sep 09, 2014 6:28 am

உங்கள்  படைப்பா, இல்லை  மற்றொருவர்  படைப்பா? எதுவாகிலும்,  படித்து  ரசித்தேன்.  ஓலத்தில் தொடங்கி, குருதியில் முடிவு! பேச்சுவழக்கமான போக்கில் பா இயற்றியுள்ளது மெச்சத்தகுந்ததே!

மெம்மேலும்  கவிதைகள் படைக்க  வாழ்த்துக்கள்!

MaxEntropy_Man

Posts : 12709
Join date : 2011-04-28

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by Maria S on Tue Sep 09, 2014 7:07 am

ஆஹா , அருமை GC!

வாழ்த்துக்கள். 

நலம்தானா?

Maria S

Posts : 2776
Join date : 2011-12-31

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by garam_kuta on Tue Sep 09, 2014 8:19 am

goodcitizn wrote:ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!......
கொள்ளி வெக்க நாதி இல்ல, மாரியாத்தா - என்னைக்
கொன்னாத் தான் லாபம் என்ன, மாரியாத்தா?
......

கண்ணிர் பெருகி, கன்னம் வழிந்து, நெஞ்சில் விழுந்து, இதயத்தை சுட்டெரித்த வரிகள்....

அன்பரே! வளர்க உங்கள் தொண்டு

garam_kuta

Posts : 3106
Join date : 2011-05-18

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by goodcitizn on Tue Sep 09, 2014 12:18 pm

MaxEntropy_Man wrote:உங்கள்  படைப்பா, இல்லை  மற்றொருவர்  படைப்பா? எதுவாகிலும்,  படித்து  ரசித்தேன்.  ஓலத்தில் தொடங்கி, குருதியில் முடிவு! பேச்சுவழக்கமான  போக்கில் பா இயற்றியுள்ளது மெச்சத்தகுந்ததே!

மெம்மேலும்  கவிதைகள் படைக்க  வாழ்த்துக்கள்!

I only post my own poems, Max. Thanks for the kind words, especially in such beautiful Thamizh.

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by goodcitizn on Tue Sep 09, 2014 12:20 pm

Maria S wrote:ஆஹா , அருமை GC!

வாழ்த்துக்கள். 

நலம்தானா?

Doing well, Maria. Long time no see. Hope all is well.

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by goodcitizn on Tue Sep 09, 2014 12:22 pm

garam_kuta wrote:
goodcitizn wrote:ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!......
கொள்ளி வெக்க நாதி இல்ல, மாரியாத்தா - என்னைக்
கொன்னாத் தான் லாபம் என்ன, மாரியாத்தா?
......

கண்ணிர் பெருகி, கன்னம் வழிந்து, நெஞ்சில் விழுந்து, இதயத்தை சுட்டெரித்த வரிகள்....

அன்பரே! வளர்க உங்கள் தொண்டு

LOL! You are always so entertaining!

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

Re: ஒரு கிராமியப் பெண்ணின் ஓலம்!

Post by Sponsored content Today at 5:29 pm


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum