காதலிக்க முடியவில்லை!

View previous topic View next topic Go down

காதலிக்க முடியவில்லை!

Post by goodcitizn on Thu Nov 06, 2014 11:43 am

நடையைப் பார்த்தால் அன்னநடை போல இல்லையே
இடையைப் பார்த்தால் கொடிஇடையாய்த் தோணவில்லையே
தொடையைப் பார்த்தால் வாழைத்தண்டு போல இல்லையே
ஜடையைப் பார்த்தால் கார்குழலைக் காணவில்லையே

காதலிக்க நல்ல பொண்ணு கிடைக்க வில்லையே
காமதேவன் அம்பு நெஞ்சை உடைக்க வில்லையே
காதல்பசி காது ரெண்டை அடைக்க வில்லையே
கண்டபடி நரம்பு எல்லாம் புடைக்க வில்லையே

காதில் மெல்ல காதல் சொல்லப் பாவை இல்லையே
தூது செல்லப் பறவை இனம் தேவை யில்லையே
போதை செய்யும் கோதை அவள் பார்த்த தில்லையே
போட்ட சட்டை பனியன் எல்லாம் வேர்த்த தில்லையே

மொட்டவிழ்ந்த தேன்மலரை முகர வில்லையே
முகர்ந்துவிட்டு ரீங்கரித்து நகர வில்லையே
பட்டுவிரல் கைத் தலத்தைப் பற்ற வில்லையே
குட்டிபோட்ட பூனையைப்போல் சுற்ற வில்லையே

கலைமானைத் தேடிக் கண்டு பிடித்த தில்லையே
காம சூத்திரம் ரகசியமாய்ப் படித்த தில்லையே
மலைத்தேனும் கொலைத்தேனும் புளித்த தில்லையே
மன்மதனும் இம்சை இங்கு அளித்த தில்லையே

பள்ளியறை என்று சொன்னால் பரிட்சை நிறைய உண்டு
பள்ளியறைப் பாட்டுப் பாடும் புலவர் சபையைக் கண்டு
பள்ளியறைப் பக்கம் போக இஷ்டமே இல்லே
பள்ளியறை பார்க்காட்டி நஷ்டமே இல்லே

பெண்ணழகில் எதுகை மோனை எனக்குத் தெரியலே
சாமுத்திரிகா லட்சணங்கள் எனக்குப் புரியலே
கம்பன் கோர்த்த வர்ணனையை நம்ப முடியலே
கற்பனைக்கு குதிரை கட்டி எம்ப முடியலே

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum