How many colleges does Jeppiyar own? (Tamil content) Hitskin_logo Hitskin.com

This is a Hitskin.com skin preview
Install the skinReturn to the skin page

Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

How many colleges does Jeppiyar own? (Tamil content)

Go down

How many colleges does Jeppiyar own? (Tamil content) Empty How many colleges does Jeppiyar own? (Tamil content)

Post by MulaiAzhagi Fri Aug 10, 2012 3:12 pm

http://viruvirupu.com/japier-arrested/22264/

எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு, கட்சியை விட்டு ஒதுங்கினார். கவனத்தை கல்வித் துறை மீது திருப்பினார். பொறியியல் கல்லூரிகளை துவக்கினார்.

இன்று பல கல்லூரிகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. சத்யபாமா பல்கலைக் கழகம், பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக், ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, புனித ஜோசப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர். ஆர்., பொறியியல் கல்லூரி, மாமல்லன் பொறியியல் கல்லூரி, செயின்ட் மேரீஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்… பட்டியல் நீளமானது


அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் கல்லூரிகளை உருவாக்க துவங்கியபோதுதான் சிக்கல் வந்திருக்கிறது

கடந்த வருடம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்னம் கிராமத்தில், ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டது. இதன் தலைவராக ஜேப்பியாரும், இவரது மருமகன் மரியவில்சன் என்பவர் இயக்குனராகவும் உள்ளனர். கல்லூரியில் கட்டடங்கள் எதுவும் முழுமையாக கட்டப்படவில்லை. அதற்குள் ஜேப்பியாரின் செல்வாக்கில் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, கல்லூரி வளாகத்தில், கல்லூரி அரங்கம், தகவல் தொழில்நுட்ப ஆய்வகம், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை திறந்து வைத்துவிட்டு சென்றார்.

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால், கட்டடங்கள் கட்டுமானப் பணி துரிதப்படுத்தப்பட்டது. எந்த அனுமதியும் பெறாமல், முறைகேடாக பன்முக விளையாட்டு அரங்கு கட்டும் பணி நடந்த போது, சுவர் சரிந்து விழுந்தது. அதில்தான் பத்து வட மாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். ஜேப்பியாரும் சிக்கிக் கொண்டார்.

MulaiAzhagi

Posts : 1254
Join date : 2011-12-20

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum