பரிசம்!

View previous topic View next topic Go down

பரிசம்!

Post by goodcitizn on Thu Oct 23, 2014 2:52 am

களத்து மேட்டுப் பக்கத்திலே
களைச்சுப் போயி நீ இருந்தே
வளைச்சுப் போட வந்தேன் நான், செம்பருத்தி - முகத்தை
மறைச்சு ஏண்டி வைச்சுக் கிட்டே துன்புறுத்தி?

வெத்து வேட்டு ஒட்டுக் குள்ளே
விளாம் பழத்து உருண்டை போலே
தத்தளிச்சு நான் இருக்கேன், செல்லக் குட்டி - மனசை
கொத்திக் கிட்டுப் போறியே நீ வெல்லக் கட்டி!

குட்டி போட்ட பூனை போலே
சுத்தி சுத்தி நானும் வாரேன்
முட்டி எல்லாம் வலிக்குதடி, சாத்துக்குடி - என்
சொப்பனத்தை பலிக்க வைச்சு ஏத்துக்கடி!

பார்வையிலே மீனை வைச்சு
பருவத்திலே தேனை வைச்சு
வேர்வையிலே முத்து மாலை செஞ்சுப் புட்டாய் - என்
வாசலுக்கு நீதானே பஞ்சு மிட்டாய்!

உச்சி வெயில் அடிக்குதடி
உடம்பு ரொம்ப துடிக்குதடி
மெச்சி ஒரு பேச்சுப் பேசு, செங்கமலம் - கொஞ்சி
முத்தம் நித்தம் நானும் தாரேன் அங்கமெலாம்!

எச்சிக்கடி கடி கடிச்சு
எனக்கு ஒரு பிடி கொடுத்து
மிச்சத்தைத் தின்னு போடு, கன்னுக் குட்டி - உன்
எச்சி எனக்கு மோட்சமடி பன்னு ரொட்டி!

குடுகுடுப்பை சத்தம் போலே
படுத்துதடி படுத்துதடி
படுக்கையிலே உன் நினைப்பு, பொன்னுரங்கம் - நாமே
பரிசம் போட்டாத்தானே என் கண்ணுறங்கும்!

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

Re: பரிசம்!

Post by MaxEntropy_Man on Thu Oct 23, 2014 7:03 am

கிளப்பிட்டீங்க!

இந்த இணைதளத்துல குழாயடி சண்டை நடக்குதே, அதைப்பத்தி ஏதாவது நகைச்சுவையா கவிதை எழுதுங்களேன்.

MaxEntropy_Man

Posts : 12723
Join date : 2011-04-28

View user profile

Back to top Go down

Re: பரிசம்!

Post by goodcitizn on Thu Oct 23, 2014 8:47 am

MaxEntropy_Man wrote:கிளப்பிட்டீங்க!

இந்த  இணைதளத்துல குழாயடி  சண்டை  நடக்குதே, அதைப்பத்தி  ஏதாவது  நகைச்சுவையா  கவிதை எழுதுங்களேன்.

Idhu saakadai sandai, venaam! Smile

goodcitizn

Posts : 3258
Join date : 2011-05-03

View user profile

Back to top Go down

Re: பரிசம்!

Post by Impedimenta on Thu Oct 23, 2014 10:21 am

pramatham, GC! MAX - LOL @kuzhaayadi sandai.

Impedimenta

Posts : 2791
Join date : 2011-04-29

View user profile

Back to top Go down

Re: பரிசம்!

Post by Sponsored content Today at 5:02 am


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum