பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?  Hitskin_logo Hitskin.com

This is a Hitskin.com skin preview
Install the skinReturn to the skin page

Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?

3 posters

Go down

பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?  Empty பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?

Post by Rishi Fri May 03, 2013 9:36 pm

பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?






ன்னியர் சங்கத்தின்

சார்பில் ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் கொண்டாடப்படும் ‘சித்திரை
முழுநிலவுப் பெருவிழா’ இந்த ஆண்டும் கடந்த 25-ஆம் தேதி ஏக அமர்க்களத்துடன்
நடைபெற்றது. உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்
போகிறார் என்று பெரும் முக்கியத்துவம் அளித்து, ஓரிரு வாரங்களுக்கு முன்பே
பா.ம.க. சார்பில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், கடைசி
நேரத்தில் மாமல்லபுரம் விழாவுக்கு அகிலேஷ் யாதவ் வராமல், அதற்குச் சில
தினங்களுக்கு முன் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் பங்கேற்ற,
சென்னையில் அரங்கத்திற்குள் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டுச்
சென்று விட்டார்.

“தற்போது தமிழகத்தில் ‘காதல் திருமணங்கள்’ என்ற பிரச்னையை முன் வைத்து
தலித் அமைப்புகளுக்கு எதிராகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் குறி
வைத்தும் டாக்டர் ராமதாஸ் காட்டமாக விமர்சித்து பிரசாரம் செய்து வரும்
நிலையில், வன்னியர் சங்கம் நடத்தும் மாநாட்டில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பது,
தலித்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தருவதாகவே கருதப்படும்; உ.பி.யில்
சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக இக்கருத்து பரப்பப்படும். ஆகவே மாமல்லபுரம்
நிகழ்ச்சியைத் தவிர்ப்பது நல்லது” என்று உ.பி. முதல்வருக்கு அவரது
கட்சியின் சென்னைப் பிரமுகர்கள் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்தே,
மாமல்லபுரம் நிகழ்ச்சிக்கு அவர் வராமல் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.



தலித் அல்லாத பிற சமுதாயங்களைச் சேர்ந்த 31 அமைப்புகள் டாக்டர் ராமதாஸின்
‘காதல் நாடகத் திருமண எதிர்ப்பு’ பிரசாரத்துக்கு ஆதரவாக இருப்பதாகவே
கூறப்பட்டாலும், மாமல்லபுரம் நிகழ்ச்சியில் நாடார் சங்கப் பிரதிநிதி
ஒருவர், தேவர் அமைப்பு ஒன்றின் தலைவர், கொங்கு வேளாள கௌண்டர்கள் அமைப்பின்
நிர்வாகி ஒருவர், மற்றும் பிராமணர் சங்கத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்
என்று நான்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பேசினார்கள்.



பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?  Pa_ma_ka_02_05_2013
டாக்டர் ராமதாஸ்

சென்னையில் வரும் மே மாதம் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் இந்த ஜாதி
அமைப்புகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டமும், அதைத் தொடர்ந்து
செய்தியாளர்களுடன் சந்திப்பும் நடைபெறும் என்று மாமல்லபுரம் நிகழ்ச்சியில்
கூறிய டாக்டர் ராமதாஸ், பணம் பறிக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட காதல்
நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்டோர் பற்றிய சில விவரங்களை, ஆதாரத்துடன்
காவல்துறைக்கு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.




இந்தக் கூட்டத்தில் மீண்டும் ஒருமுறை டாக்டர் ராமதாஸ், ‘வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் பா.ம.க.. எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாது’ என்று
திட்டவட்டமாகக் கூற, அவரது மகன் டாக்டர் அன்புமணியோ, ‘பா.ம.க. தலைமையில்
ஒரு கூட்டணி அமையும்’ என்றார். ‘இது சமுதாயக் கூட்டணி’ என்று பிறகு பேசிய
ஒரு ஜாதி அமைப்பின் தலைவர் குறிப்பிட்டார்.




‘உத்திரப் பிரதேசத்தில் யாதவர்கள் அத்தனை பேரும் சமாஜ்வாதி கட்சிக்கு
ஓட்டுப் போடுகிறார்கள்; அந்த உணர்வு வன்னியர்களுக்கு வர வேண்டும்’ என்று
அன்புமணி கூற, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., டாக்டர்
ராமதாஸ், ஜி.கே. மணி ஆகியோரும் அதே கருத்தை தங்கள் பேச்சில்
வலியுறுத்தினர். ‘நாம் ஆளப் பிறந்த ஜாதி; 2016-ல் வன்னியர் முதலமைச்சராக
வேண்டும்’

என்ற கருத்து திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது.




“ஜாதி அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் நோக்கத்துடனேயே
பா.ம.க.வின் அண்மைக் காலச் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன; அதை
உறுதிப்படுத்தும் விதத்திலேயே மாமல்லபுரம் நிகழ்ச்சியில் பா.ம.க.
முக்கியஸ்தர்களின் பேச்சுக்கள் இருந்தன. ஆனால், பா.ம.க.வின் இந்த
கணக்குக்குப் பயன் இருக்குமா என்பது சந்தேகம்தான்; ஏனென்றால் ஓட்டு
வங்கியைக் கொண்ட தி.மு.க.வே, 2001-ல் ஜாதி அமைப்புகளை பின்புலமாகக் கொண்டு
உருவான சில கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, அக்கட்சிகளுக்குச்
சில தொகுதிகளை ஒதுக்கி, தேர்தலைச் சந்தித்து, அது எடுபடாமல் போய் விட்டது”
என்று சொன்னார், இடதுசாரி அரசியல் பிரமுகர் ஒருவர்.






இது ஒருபுறமிருக்க, மாமல்லபுரம் கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா,
தி.மு.க. தலைவர் கருணாநிதி, விஜயகாந்த், வீரமணி, தா. பாண்டியன் என்று
பலரையும் காடுவெட்டி குரு சகட்டு மேனிக்கு ஏக வசனத்தில் மிகக் கடுமையாக
பே(ஏ)சியதற்காகவும், கூட்டத்திற்கு வந்த பா.ம.க. மற்றும் வன்னியர்
சங்கத்தினர் மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் சட்ட ரீதியாக
அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்
கட்சிகள், புதிய தமிழகம் ஆகியவற்றின் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில்
வலியுறுத்தினர்.




இதன் எதிரொலியாக, வன்முறையைத் தூண்டும் விதமாகவும், தரக் குறைவாகவும்
பேசியதற்காக காடுவெட்டி குரு கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு,
நடவடிக்கை கோரியுள்ள இக்கட்சியினரிடையே எழுந்துள்ளது.




– தோஸ்த்

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?  Empty Re: பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?

Post by MaxEntropy_Man Fri May 03, 2013 9:51 pm

i feel so disconnected from TN politics. it feels like a different world altogether.
MaxEntropy_Man
MaxEntropy_Man

Posts : 14702
Join date : 2011-04-28

Back to top Go down

பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?  Empty Re: பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?

Post by Marathadi-Saamiyaar Fri May 03, 2013 10:32 pm

Paamara Maakkal Katchi ?

Marathadi-Saamiyaar

Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110

Back to top Go down

பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?  Empty Re: பா.மா.க. உருவாக்கும் ஜாதிக் கூட்டணி எடுபடுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum