This is a Hitskin.com skin preview
Install the skin • Return to the skin page
Hacked to death in Mylapore (Tamil Content)
2 posters
Page 1 of 1
Hacked to death in Mylapore (Tamil Content)
மயிலாப்பூரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை:மக்கள் பதறியடித்து ஓட்டம்
By வாசுதேவன், சென்னை
First Published : 26 March 2014 09:05 PM IST
சென்னை மயிலாப்பூரில் லஸ் கார்னரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மயிலாப்பூர் மாதவராவ்கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் தமிழ்செல்வம் (24). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடம் அருகே பெட்டிக் கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் சொந்தமாக வாடகை வேனும் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் தமிழ்செல்வம், புதன்கிழமை மாலை 3 மணியளவில் நடந்து வந்தார். அப்போது அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், செல்வத்திடம் தகராறு செய்தனராம். தகராறு முற்றவே 4 பேரும் அரிவாளால் தமிழ்செல்வத்தை அரிவாளால் வெட்டினர்.
இதில் காயமடைந்த செல்வம் அவர்களிடமிருந்து தப்பியோடினர். ஆனால் அந்த கும்பல் விரட்டிச் சென்று செல்வத்தை வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
பட்டப்பகலில் மக்கள் நெரிசல் மிக்கப் பகுதியில் நடைபெற்ற இச் சம்பவத்தால் அந்த பகுதியில் நடந்ததால், மக்கள் பதறியடித்து ஓடினர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சில கடைகளும் சிறிது நேரம் மூடப்பட்டன.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீஸார்வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். போலீஸôரின் முதல் கட்ட விசாரணையில், செல்வத்துக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு ரௌடியின் மகனுக்கும் இடையே அவர் கடையில் தகராறு ஏற்பட்டதும், அதில் அந்த ரௌடியின் மகனை தமிழ்செல்வன் அடித்தாராம், இச் சம்பவத்துக்கு பழிக்குபழியாக செல்வம் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸார் மயிலாப்பூர் நாட்டான் தோட்டத்தைச் சேர்ந்த பள்ளு மதன், வெள்ளைக்குமார் மற்றும் அவர் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
அதேநேரத்தில் அந்தப் பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீஸார் வைத்துள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் தனியார் நிறுவனங்களில் வைóக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஆகியவற்றில் இக் கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: Hacked to death in Mylapore (Tamil Content)
This made me study the entire Mylapore-Luz-Ice house area map, and I have one question.
How come I dont see "Krishnampettai" cremation ground on the map? I see a Police Quarters at that spot. have they leveled the cemetary and built metro railline and police quarters over those grounds?
Marathadi-Saamiyaar- Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110
Similar topics
» Did the Indian Railways work him to death? (Tamil content)
» Tamil Muslim advises Tamil Brahmins to convert (Tamil content)
» Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)
» silEdai - a type of pun in tamil (tamil content)
» Tamil women have come a long way (Tamil content)
» Tamil Muslim advises Tamil Brahmins to convert (Tamil content)
» Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)
» silEdai - a type of pun in tamil (tamil content)
» Tamil women have come a long way (Tamil content)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum