Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

KV: Do you agree with this demand? (Tamil content)

3 posters

Go down

KV: Do you agree with this demand? (Tamil content) Empty KV: Do you agree with this demand? (Tamil content)

Post by Rishi Thu Jun 20, 2013 5:29 pm

.அண்ணாமலை பல்கலை.யில் 85% இடங்களை தமிழக மாணவர்களுக்கு வழங்க கோரிக்கை.By ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம்

First Published : 20 June 2013 07:22 PM IST
.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கையில் 85 சதவீத இடங்களை தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகியிடம் தமிழக மாணவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா தலைமையில் பொறுப்பாளர்கள் ஆ.குபேரன், ப.கா.கார்த்தி, கி.சதீஷ்குமார், மு.சம்பந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவிபரம்: சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அண்மைக் காலமாக பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழகஅரசு ஏற்றது. இந்த நடவடிக்கையை மாணவர் முன்னணி வரவேற்கிறது. அண்ணாமலைப் பல்கலையில் ஆண்டு தோறும் வெளி மாநில மாணவர்கள் அதிகமான பேர் சேர்க்கப்படுகின்றனர். இதனால் தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பு புறக்கணிக்கப்படுகிறது. தமிழ் வளர்க்கப்பட்ட இப்பல்கலையில் அண்மைக் காலமாக வெளி மாநில மாணவர்களால் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி திணிப்பு மேலோங்கியுள்ளது. மேலும் ஹோலி, ஓணம் போன்ற கொண்டாட்டங்களால் பல்கலைக்கழக வளாகத்தின் அமைதி சூழல் கெட்டு காவல்துறையினர் தடியடி வரை நடத்தியுள்ளனர். எனவே பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் 85 விழுக்காடு தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மட்டுமே மாணவர்களிடமிருந்து பெற வேண்டும். கடலூர், விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு சேர்க்கையில் வழங்கப்பட்ட முன்னுரிமையை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும் என மனுவில் தமிழக மாணவர் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

KV: Do you agree with this demand? (Tamil content) Empty Re: KV: Do you agree with this demand? (Tamil content)

Post by Guest Thu Jun 20, 2013 5:30 pm

does KV know to read/write tamil?

Guest
Guest


Back to top Go down

KV: Do you agree with this demand? (Tamil content) Empty Re: KV: Do you agree with this demand? (Tamil content)

Post by southindian Thu Jun 20, 2013 6:49 pm

Vidya Bagchi wrote:does KV know to read/write tamil?

KV is a hoax.
southindian
southindian

Posts : 4643
Join date : 2012-10-08

Back to top Go down

KV: Do you agree with this demand? (Tamil content) Empty Re: KV: Do you agree with this demand? (Tamil content)

Post by Kayalvizhi Sun Jun 23, 2013 12:36 am

At least 90% seats in TN academic insitutions Including IIT should be for TN students. Those foreigners admitted should pay 50% more tution. IN US even out of state syudents pay higher tution in some states

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

KV: Do you agree with this demand? (Tamil content) Empty Re: KV: Do you agree with this demand? (Tamil content)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum