Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

KV, What is your opinion on what these SL Tamils are saying?

3 posters

Go down

KV, What is your opinion on what these SL Tamils are saying? Empty KV, What is your opinion on what these SL Tamils are saying?

Post by Rishi Sat Apr 13, 2013 9:46 pm

வீ. தனபாலசிங்கம் (ஆசிரியர், ‘தினக்குரல்’ நாளிதழ்) யாழ்ப்பாணத் தமிழர் :



KV, What is your opinion on what these SL Tamils are saying? Ilangail_thuglak_11_04_2013_1
வீ.தனபாலசிங்கம்

“தமிழக அரசியல்வாதிகளின் போராட்டங்களை
நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் அங்கு ஓட்டு
வாங்குவதற்காக, இலங்கை விவகாரத்தில் பல நிலைப்பாடுகளை எடுப்பார்கள். ஆனால்,
மாணவர்களின் போராட்டம் உணர்வு பூர்வமானது. அதை நாங்கள் பெரிதும்
மதிக்கிறோம். ஆனால் அப்படிப் போராடும் முன்பாக, எங்களின் தேவை என்ன என்பதை
அறிந்து போராட வேண்டும். இல்லையென்றால், எங்கள் கோரிக்கை ஒன்றாகவும்,
அவர்கள் கோரிக்கை ஒன்றாகவும் இருந்தால் அது எல்லோருக்கும் தோல்வியைத் தந்து
விடும். “தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட்டு விட்டோம். இவ்வளவு
அனுபவங்களுக்குப் பிறகு மீண்டும் ‘தமிழ் ஈழம்’ என்ற கோரிக்கையைக் கையில்
எடுத்தால், அது எஞ்சியுள்ள தமிழர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடும்.
இன்றைய நிலையில் அது சாத்தியமில்லாத கோரிக்கை. எப்படி இலங்கை அரசாங்கம்
எங்களுக்கு உடன்பாடில்லாத விஷயங்களை எங்கள் மீது திணிக்கக் கூடாது என்று
நினைக்கிறோமோ, அப்படித்தான் தமிழகத் தமிழர்களும் எங்கள் ஆலோசனையில்லாமல்
எங்கள் மீது எதனையும் திணிக்கக் கூடாது என்று நினைக்கிறோம். உங்கள்
அன்புக்குத் தலை வணங்குகிறோம். ஆனால், அது எங்களுக்கு அனுகூலமானதாக இருக்க
வேண்டும்”.




வீ. ஆனந்த சங்கரி (செயலாளர், தமிழர் விடுதலை கூட்டணி) :



KV, What is your opinion on what these SL Tamils are saying? Ilangail_thuglak_11_04_2013_2
வீ.ஆனந்த சங்கரி

“தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை நாங்கள்
துவங்கும் முன்பே துவங்கியவர்கள் இந்தியத் தமிழர்கள்தான். ஆனால், அந்தக்
கோரிக்கையை நீங்களே கைவிட்டு விட்டீர்கள். அதிகாரம் பொருந்திய மாநில அரசு
என்ற நிலைக்கு நீங்கள் பழகி கொண்டீர்கள். தற்போது அதில் திருப்தியடைந்து
நிம்மதியாக வாழ்கிறீர்கள். இதையேதான் இங்குள்ள தமிழர்களும் விரும்புகிறோம்.
அதைப் பெற்றுத் தரும் வகையில் உங்கள் போராட்டம் அமையுமானால், அது
பாராட்டுக்குரியது. சிங்களத் தலைவர்கள் பலர் தங்கள் அரசியலுக்காகப் பல
தவறுகளைச் செய்யலாம். ஆனால், பெரும்பாலான சிங்கள மக்கள் நல்லவர்கள்.
அவர்களைத் தமிழகத்தில் வைத்துத் தாக்குவது மிகவும் தவறானது. காந்தி பிறந்த
மண்ணில் அது நடக்கக் கூடாது. அது எங்களைத்தான் மேலும் பாதிக்கும்.




யோகேஸ்வரி பற்குணராசா (மேயர், யாழ்ப்பாணம்) :



KV, What is your opinion on what these SL Tamils are saying? Ilangail_thuglak_11_04_2013_3
யோகேஸ்வரி பற்குணராசா

“சுமார் எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும்
தமிழ்நாட்டைத் தனி நாடாக்க முடியவில்லை. மொத்த ஜனத் தொகை இரண்டு கோடி கொண்ட
இலங்கையில் முஸ்லிம் தமிழர்களைத் தவிர்த்து, மலையகத் தமிழர்களைத்
தவிர்த்து, இந்திய வம்சாவளித் தமிழர்களைத் தவிர்த்து, வெறும் வடக்கு
மற்றும் கிழக்குப் பகுதித் தமிழர்கள் சில லட்சம் பேருக்கு மட்டும் ஒரு தனி
நாடு கேட்பது எந்த விதத்தில் சாத்தியப்படும் என்பதை, அங்குள்ள தமிழர்கள்
கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “விடுதலைப் புலிகள் மற்றும்
அவர்களுக்கு நெருக்கமான ஆதரவாளர்களைத் தவிர, மற்ற எல்லோருமே தமிழீழக்
கோரிக்கையைக் கைவிட்டுப் பல காலம் ஆகி விட்டது. தற்போது அதைக் கையில்
எடுத்துப் போராடுவது, இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் குறித்த மிச்ச
கனவுகளையும் திசை மாற்ற மட்டுமே உதவும். தமிழகத்தில் நிலவும் வதந்திகளை
நம்பாதீர்கள். இங்கு வாழ்வது நாங்கள். இங்கு வந்து பாருங்கள். தற்போதைய
உங்கள் போராட்ட வடிவம், எங்களுக்கு நன்மை தராமல் பாதிப்பு ஏற்படுத்துவதற்கே
வாய்ப்பு அதிகம் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.”




கங்கா (பஸ் ஆபரேட்டர், யாழ்ப்பாணம்) :



KV, What is your opinion on what these SL Tamils are saying? Ilangail_thuglak_11_04_2013_4
கங்கா

“இறுதிப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகப்
போகிறது. இங்கு தனி ஈழம்தான் தீர்வு என்று நாங்கள் நினைத்திருந்தால், இந்த
நான்கு ஆண்டுகளில் இங்கு ஒருவராவது உண்ணாவிரதம் இருந்திருக்க மாட்டோமா?
ஒருவராவது தீக்குளித்திருக்க மாட்டோமா? அப்படி எந்தச் செய்தியாவது உங்களை
வந்தடைந்ததா? பிறகு ஏன் அங்குள்ள இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்
கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. மொத்த இலங்கை அளவு கொண்ட தமிழகத்தைத் தனி
நாடாக கேட்டால் டெல்லி கொடுக்குமா? பிறகு அந்த அளவை விட மிக மிகச் சிறிதான
பகுதியைத் தனி நாடாக இங்கு எப்படிப் பெற முடியும்? கடந்த 30 வருடங்களாகப்
போர் என்ற பெயரில் நரக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள், தற்போதுதான்
நிம்மதியாக வாழத் துவங்கியுள்ளோம். எங்களின் அரசியல் தீர்வுக்கு உதவுங்கள்.
அதற்கு இந்தியாவைத் தயார்படுத்துங்கள். அதுதான் நீங்கள் எங்களுக்குச்
செய்யும் நிஜ உதவியாக இருக்கும்”.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

KV, What is your opinion on what these SL Tamils are saying? Empty Re: KV, What is your opinion on what these SL Tamils are saying?

Post by Rishi Sat Apr 13, 2013 10:08 pm

பெயர் சொல்ல விரும்பாத தமிழ்ப் பத்திரிகையாளர் :




“தமிழக மாணவர்களுக்கு நான் வைக்கும்
வேண்டுகோள் இதுதான். தங்கள் தனி நாடு கோரிக்கை இந்தியாவில் எடுபடாது என்பதை
உறுதி செய்து கொண்ட பின்னர், அந்த ஆசையைக் கைவிட முடியாத அங்குள்ள சில
அரசியல்வாதிகள், அவர்கள் ஆசையை உங்கள் மீதும், எங்கள் மீதும் திணிக்கப்
பார்க்கிறார்கள். நன்கு வசதியாக இருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம்
சலுகைகளை அனுபவிக்கும் அந்த அரசியல்வாதிகளின் தூண்டுதலுக்கு ஆளாகி, உங்கள்
கல்வியைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள். ஒரு அரசியல் கூட்டணிக்குப் போனால்,
இரண்டு டிஜிட் ஸீட்கூட வாங்க முடியாத சில சின்னச் சின்ன அரசியல் தலைவர்கள்,
அவர்களின் அரசியல் ஸ்திரத் தன்மைக்காக உங்கள் வாழ்க்கையைப்
பலியாக்குகிறார்கள். இந்த மண்ணில், எங்கள் இளைஞர்கள், வாழ்க்கையைத்
தொலைத்தது போதும். அங்குள்ள இளைஞர்களான நீங்களும் உங்கள் வாழ்க்கையைத்
தொலைத்து விடாதீர்கள். “இங்கு தனிநாடு என்பது சாத்தியமேயில்லை. எங்களுக்கு
நல்லது செய்ய நினைத்தால், அரசியல் தீர்வு, தமிழருக்குச் சம உரிமை என்பதான
கோரிக்கைகளுக்காகப் போராடுங்கள். அதுதான் யதார்த்த நிலைமை. அதுதான்
எங்களுக்கு நன்மை பயக்கும். எங்கள் மீது அன்பு செலுத்தும் நீங்கள், நாங்கள்
வாழும் நாட்டை எதிரி நாடு என்று அறிவிக்கச் செய்வதில் என்ன லாபம்
அடைவீர்கள்? இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால், இங்குள்ள மக்கள்
அரிசி, பருப்பு, எண்ணெய், சோப், துணிமணிகளுக்கு எங்கே போவோம்? அவை வேறு
நாடுகள் வழியாக எங்களுக்கு வந்து சேரும். விலையும் மிக அதிகமாகும். வழியில்
யார் யாரோ கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். இதையா நீங்கள்
விரும்புகிறீர்கள்?”




கிளிநொச்சி வி. சகாதேவன் (போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர்) :



KV, What is your opinion on what these SL Tamils are saying? Ilangail_thuglak_11_04_2013_5
கிளிநொச்சி வி.சகாதேவன்

“அங்கு போராடும் இளைஞர்கள் ஒருமுறை இங்கு
வந்து பார்த்து, இங்குள்ள மக்களைச் சந்தித்த பிறகு, உங்கள் போராட்டக்
கோரிக்கைகளை வடிவமைக்க வேண்டும் என்று அன்போடு அழைப்பு விடுக்கிறேன். வழி
தவறிய போராட்டம், நன்மைக்குப் பதிலாக தீமையை உருவாக்கி விடும். 90 ஆயிரம்
விதவைகள் இங்கு இருக்கிறார்கள். எங்கள் ஒரு இயக்கத்தில் மட்டும்,
சொத்துக்களை இழந்த 2244 குடும்பங்கள் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள். ஈழம்
என்பது இனி கனவிலும் சாத்தியமில்லாத விஷயம். அதற்குப் பதிலாக, விதவைகள்
தங்கள் குழந்தைகளை வளர்த்தெடுக்க மறுவாழ்வுத் திட்டம், வீடுகளை
இழந்தவர்களுக்கு மீண்டும் வீடுகள், நிலத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் அதே
நிலம், தொழிலை இழந்தவர்களுக்கு இழப்பீடுகள் என்பதுதான் எங்களது இன்றையத்
தேவை. தொலைத்த இடத்தில் தேடினால்தான் இழந்த பொருள் கிடைக்கும். “ராஜபக்ஷ
அரசின் செயல்களுக்கு அந்த அரசிடம்தான் இழப்பீடு பெற முடியும். அவருக்குத்
தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைப்பது முக்கியமல்ல. எங்கள் வாழ்வு
எங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டுமென்பதுதான் அதை விட முக்கியம்.
இவரிடம் போராடினால்தான் ஓரளவாவது இழப்பீடு பெற முடியும். 18 கட்சி கொண்ட
கூட்டணி ஆட்சி இது. பல கட்சிகளின் மூலம் அவருக்கு நெருக்கடி கொடுக்க
முடியும். பல தமிழ் கட்சிகளும் அதில் உள்ளன. அவர்களும் அதற்கு நெருக்கடி
கொடுக்க முடியும். அடுத்த ஆட்சி வந்து விட்டால் ‘அது அவர்கள் பாடு உங்கள்
பாடு’ என்று கைகழுவி விடக்கூடும். எனவே, முடிந்தளவு இந்த அரசிடமே பேசி,
எங்கள் வாழ்க்கையைத் திரும்பப் பெறுவதுதான் சிறந்த ராஜதந்திரமாக இருக்க
முடியும். அதற்கு உங்கள் போராட்டங்கள் துணை நிற்க வேண்டுமே தவிர, தடைக்
கற்களாகி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.”





ஆர். யோகராஜன் (ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க் கட்சி எம்.பி.) :



KV, What is your opinion on what these SL Tamils are saying? Ilangail_thuglak_11_04_2013_6
ஆர்.யோகராஜன்

“எழுபதுகளில் அஹிம்சா முறையில் தோன்றிய தனித்
தமிழீழக் கோரிக்கை, 80-களில் ஆயுதம் ஏந்தத் துவங்கியது. ஆனால், தொடர்ந்து
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில், அந்தக் கோரிக்கை படிப்படியாகக்
கைவிடப்பட்டுவிட்டது. புலிகள் மட்டுமே அதை விரும்பினார்கள். மக்கள் அரசியல்
தீர்வை நோக்கி நகரத் துவங்கி விட்டனர். தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வு
தருவது குறித்து சிங்கள மக்களிடையே நடத்தப்பட்ட சர்வேயில், 82 சதவிகித
சிங்கள மக்கள் தமிழருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தனர். சிங்கள
அரசாங்கம் அரசியலுக்காகச் செயல்படலாம். ஆனால், சிங்கள மக்கள் அப்படியில்லை.
“தமிழகத்திற்கு வரும் சிங்களவர்களை அங்குள்ளவர்கள் தாக்குவது மிக மிகத்
தவறானது. புத்தபிட்சுகள் கடுமையாகத் தாக்கப்பட்ட ஃபோட்டோ, வீடியோக்கள்
வெளியான பிறகும் கூட இங்குள்ள தமிழர்கள் மீது எந்தத் தாக்குதலும்
நடக்கவில்லை என்பது, இங்கு நிலவும் அமைதிக்கு ஒரு பெரிய உதாரணம். இதன்
பிறகாவது அது போன்ற செயல்கள் அங்கு நடைபெறாமல் இருக்க வேண்டும். அங்குள்ள
இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், சினிமா நட்சத்திரங்கள் இலங்கை வந்தால்
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். அவர்களுக்கு ‘தமிழ்த் துரோகி’ என்று
முத்திரை குத்துகிறீர்கள். இது என்ன நியாயம்? அவர்கள் இங்கு வந்து
மகிழ்விக்கப் போவது யாரை? இங்குள்ள தமிழர்களைத்தானே? இங்குள்ள தமிழன் தமிழ்
இசை கேட்கக் கூடாதா? அந்த இசையமைப்பாளர்களை, பாடகர்களை நேரில் பார்த்து
மகிழக் கூடாதா? கிரிக்கெட், தடகளம்... என்று விளையாட்டுகளில் கூட
இதையெல்லாம் கொண்டு வந்தது மிகத் தவறு.”




டக்ளஸ் தேவானந்தா (இலங்கை அமைச்சர்) :



KV, What is your opinion on what these SL Tamils are saying? Ilangail_thuglak_11_04_2013_7
டக்ளஸ் தேவானந்தா

“உணர்வுகளால் மட்டும் சிந்திக்காமல், நடைமுறை
சாத்தியங்களையும் மனதில் நிறுத்தி தமிழக மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.
பெரும்பாலும் தமிழர்கள் மட்டுமே உள்ள இடத்திற்கு வருகை தரும் சிங்கள
வரையும், புத்த பிட்சுகளையும் தாக்குவதென்பது சரி என்றால், 72 சதவிகித
சிங்களவர்களைக் கொண்ட மண்ணில் தமிழன் தாக்கப்பட்டதும், தாக்கப்படுவதும்
நியாயம்தான் என்றாகி விடும். அதற்குத் தயவு செய்து இடம் கொடாதீர்கள்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

KV, What is your opinion on what these SL Tamils are saying? Empty Re: KV, What is your opinion on what these SL Tamils are saying?

Post by Rishi Sat Apr 13, 2013 10:09 pm

கண்டி மலைவாழ் தமிழர்கள் :



KV, What is your opinion on what these SL Tamils are saying? Ilangail_thuglak_11_04_2013_8
கண்டி மலைவாழ் தமிழர்கள்

“இங்கு நாங்களும் சிங்களரும் சேர்ந்து
வாழ்கிறோம். தமிழகத்தில் சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகள்
தாக்கப்பட்டார்கள்; இலங்கை அலுவலகங்கள் மீது தாக்குதல் என்றெல்லாம்
செய்திகள் வந்தால், அன்றைக்கு நாங்கள் வெளியே செல்லாமல் பயந்து, பயந்து
வீட்டிற்குள்தான் இருப்போம். உங்கள் செயல்களால் எங்களது வாழ்வு
பாதிக்கப்படக் கூடாதல்லவா? எனவே, இது போன்ற தாக்குதல்களைக் கைவிடுங்கள்.
எங்களின் அபிவிருத்திக்கும், அரசியல் தீர்வுக்கும், பொருளாதார
மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் சிந்திக்க வேண்டுகிறோம்.”




பெயர் வெளியிட விரும்பாத சிங்களர் (தமிழிலேயே பேசினார்) :




“இந்தியாவில் தமிழ்நாட்டைத் தனி நாடாக்கப்
போராடாமல், இலங்கையில் பிரிவினை கேட்டு அங்கு போராடுவது ஆச்சரியமாக
இருக்கிறது. பாகிஸ்தானில் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து கடுமையான போராட்டம்
நடத்தினால், நீங்கள் காஷ்மீரைத் தனி நாடாக அறிவித்து விட முடியுமா? அதுதான்
இங்குள்ள நிலைமையும். ஏற்கெனவே சிறிய நாடு இது. இங்கு இன்னும் பிரிவுகள்
வந்து என்ன பயன்? யாழ்ப்பாணத் தமிழருக்குத் தனிநாடு கொடுத்தால், அதில்
இந்திய வம்சாவளி தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் சேர்த்துக் கொள்ள
மாட்டார்கள். பிறகு அவர்களுக்கு ஒரு நாடு தர வேண்டும். அதையடுத்து சுமார்
14 சதவிகிதம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு
தனிநாடு கொடுக்க வேண்டும். சிங்களவர்களில் கிறிஸ்தவர்கள் கணிசமாக
இருக்கிறார்கள். அவர்கள் கேட்டால் அவர்களுக்கும் ஒரு நாடு கொடுக்க
வேண்டும். சாத்தியமா இதெல்லாம்?




(இலங்கையின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் இலங்கை அனுபவம் குறித்த கட்டுரை அடுத்த இதழில்.)





இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளின் குரல்


என். நடேசன் (இலங்கையில் வெளியாகும் ‘தினமுரசு’ தமிழ் நாளிதழ் 1.4.13–பக்கம் 5-ல் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து) :




“அக்காலத்தில் பிரபாகரன் ஒன்றரைக் கோடி
சிங்களரை எதிரியாக்கியதும், பின்பு ராஜீவ் காந்தியைக் கொன்று இந்திய மக்களை
எங்களுக்கு எதிரியாக்கிய படுமுட்டாள்தனமான வேலையைக் காட்டிலும், இன்று மிக
மோசமான வேலையை இலங்கைத் தமிழருக்கு எதிராகச் செய்கிறார்கள் தமிழ்நாட்டில்
உள்ள அரசியல்வாதிகள். தமிழ்நாட்டில் வைத்து புத்த பிட்சுகளை அடிப்பது,
துன்புறுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழருக்கு எதிராக, உலகத்தில் உள்ள அறுபது
கோடி புத்த மக்களையும், அவர்களின் அரசாங்கங்களையும் தூண்டி விடுகிறீர்கள்.
நான் எழுதுவதில் சந்தேகம் இருந்தால், ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு
ஆதரவு மற்றும் நடுநிலை கடைபிடித்த நாடுகளின் பட்டியலைப் பாருங்கள். இலங்கை
அரசாங்கம் உங்களின் செயல்களிலிருந்தே பலம் பெறுகிறது. சிங்கள இனவாதத்தின்
கொம்புகளைச் சீவாதீர்கள். நாங்கள்தான் மீண்டும் ரத்தம் சிந்த வேண்டும்.”

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

KV, What is your opinion on what these SL Tamils are saying? Empty Re: KV, What is your opinion on what these SL Tamils are saying?

Post by Marathadi-Saamiyaar Sun Apr 14, 2013 1:04 am

Don't expect our Berkeleyian ealamite to even respond. Book mark this site and quote it every timeKV blabbers about Commander and Ealam.

Marathadi-Saamiyaar

Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110

Back to top Go down

KV, What is your opinion on what these SL Tamils are saying? Empty Re: KV, What is your opinion on what these SL Tamils are saying?

Post by Kayalvizhi Mon Apr 15, 2013 11:22 am

Are you people this gullible? Last week Upp, now you.

What do you expect them to say?

ASk them in secrecy. THat is called plebescite or referendum. Actually that is what TN students want, not independent TE.

Where do these ignorants get the idea that TN has given up independence demand? Did they take a secret poll in TN?

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

KV, What is your opinion on what these SL Tamils are saying? Empty Re: KV, What is your opinion on what these SL Tamils are saying?

Post by Kayalvizhi Mon Apr 15, 2013 11:40 am

What these people say openly (for fear of SL torture) and what they really think could be diffenent. DMK was swearing by the integrity of India in public but secretlt asking America if they would support if the DMK state government declare independence.

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

KV, What is your opinion on what these SL Tamils are saying? Empty Re: KV, What is your opinion on what these SL Tamils are saying?

Post by Kayalvizhi Mon Apr 15, 2013 12:04 pm

I wonder these kind of news has any bearing on the public statement by news paper editors you quoted?

----------------------------------
"COLOMBO, SRI LANKA: April 15, 2013Gunmen opened fire and torched the office of the main Tamil newspaper in northern Sri Lanka on Saturday, police said, the latest in a string of attacks on the nation's privately owned media."

"Some 17 journalists and media employees have been killed in Sri Lanka in the past decade and no-one has been brought to justice. There is no formal censorship but rights groups say journalists practice self-censorship to avoid attack."
-------------------------------------

April 3, 2013
Masked men in northern Sri Lanka have attacked the offices of a Tamil newspaper and beaten its staff.

Two members of staff were badly injured and property damaged, he said.

It is the fourth time this year that Tamil-language newspapers or their distributors have been attacked in Sri Lanka, which is one of the world's most dangerous countries for journalists.
---------------------------------------
April 3, 2013
On Saturday, dozens of people stormed a Tamil National Alliance meeting in Kilinochchi, wielding batons and throwing stones and shouting slogans at those present. No arrests have been made.
--------------------------------

Kayalvizhi

Posts : 3659
Join date : 2011-05-16

Back to top Go down

KV, What is your opinion on what these SL Tamils are saying? Empty Re: KV, What is your opinion on what these SL Tamils are saying?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum