Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழில் தீர்ப்பு வழங்கும் காலம் வரவேண்டும்: உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய்!

Go down

தமிழில் தீர்ப்பு வழங்கும் காலம் வரவேண்டும்: உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய்! Empty தமிழில் தீர்ப்பு வழங்கும் காலம் வரவேண்டும்: உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய்!

Post by FluteHolder Tue Nov 11, 2014 2:45 am

http://news.vikatan.com/article.php?module=news&aid=34634

சென்னை:  தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்கும் காலம் வரவேண்டும் என்று உத்தரகாண்ட் பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் கூறினார்.

உத்தரகாண்ட் பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் தமிழ் மொழி மீது பற்று கொண்டு அதற்காக குரல் கொடுத்து வருகிறார். இவருக்கு இன்று சென்னையில் பாராட்டு விழா நடக்க உள்ளது.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழ் மொழி தலை சிறந்த மொழியாகும். இலக்கியம், இலக்கணத்துடன் கூடிய நல்ல உண்மையான மொழியாகும்.

இந்தியா என்பது துளசிதாஸ், வால்மீகி ஆகியோருடன் மட்டும் முடிந்து விடாது. திருவள்ளுவர், பாரதியார் ஆகியோரையும் இணைத்தால் தான் முழுமையான இந்தியாவாக அமையும். நீதிமன்றங்களில் தாய்மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை.

குஜராத் மாநிலத்தில் குஜராத்தி மொழியில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. பல வடமாநிலங்களில் அவர்களது தாய் மொழியான இந்தியில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் தமிழில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. அன்னிய மொழியான ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கப்படுவது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்குவதை பார்த்தால், இந்தியாவில் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் தான் நினைவுக்கு வருகிறது. இந்த நிலைமை மாற வேண்டும். தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்கும் காலம் வரவேண்டும். அதற்கு தமிழ் ஆர்வலர்கள் முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.

ஒருவன் என்னதான் உயர்கல்வி கற்று இருந்தாலும் தாய் மொழியை பேசவோ, எழுதவோ தெரியாவிட்டால் கல்வி கற்றாலும் கல்லாதவனுக்கு சமம். மொழி என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். பிரிக்கும் பாலமாக இருக்கக் கூடாது" என்றார்.

FluteHolder

Posts : 2355
Join date : 2011-06-03

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum