Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

KV, what do you think about this?

Go down

KV, what do you think about this? Empty KV, what do you think about this?

Post by Rishi Sat Mar 23, 2013 2:23 pm

மலேசிய ரப்பர் தோட்டங்களில் பணியாற்றும் மக்களுக்கான தமிழ் கல்விக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு உரிய அளவிலான நிதி ஒதுக்காமலும், ஆசிரியர்களை நியமிக்காமலும் மாணவர்கள் படிப்பதை தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்கிறது மலேசிய இஸ்லாமிய அரசு. உயர்கல்வியிலோ தமிழ் இந்துக்கள் படிக்கவே கூடாது என்பதற்காக தனது தேசத்தில் உள்ள சுமார் 8 லட்சம் இடங்களில் 5000 இடங்களை மட்டும் இந்துக்களுக்கு ஒதுக்கி இருக்கிறது மலேசிய அரசு. அடிமையாக இந்துக்களை வைத்து ரிங்கிட்களை அறுவடை செய்யும் மலேசிய அரசும் தொழில் நிறுவனங்களும் இந்துக்களுக்கு நல்வாழ்வு ஏற்பட்டு விடவே கூடாது என்ற கெடுமதியோடு காரியம் ஆற்றுகிறார்கள். அங்கு வாழும் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் பல விதங்களில் முடக்கப் படுகின்றன.

புதிய ஆலயங்களோ வழிபாட்டு இடங்களோ கூட அவர்களுக்கு சொந்தமான இடங்களில் கூட கட்டகூடாது என்கிறது மலேசிய அரசு. ரப்பர் தோட்டங்களில் ஏராளமான முருகன் கோவில்கள், சிவன் கோவில்கள், அம்மன் கோவில்கள் உள்ளன. அவற்றை எல்லாம் அரசு குறிவைத்து அழிக்கிறது. அவர்களின் மத சுதந்திரத்தையும், வழிபாட்டு உரிமையையும் தீவிரமாக மறுக்கிறது. இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் முயற்சிகளை அரசே ஆதரிக்கிறது. இது பற்றி உரிமைக்குரல் எழுப்பும் உணர்வாளர்களை உள் நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டு கைது செய்து வருகிறது. குறைந்த அளவு கூலியே தரப்பட்டாலும் அதையும் ஒழுங்காக தர அரசு ஆவன செய்ய மறுக்கிறது. ஆலய வழிபாட்டை சீர் குலைக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன் பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூசத்தின் போது கூடியிருந்த லட்சக்கணக்கான இந்துக்கள் மீது காவல் துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி அடுத்த வந்த ஆண்டுகளில் மக்கள் கூட்டத்தை திட்டமிட்டு குறைக்கிறது .

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum