Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

KV, what do you think about this? (Tamil content)

Go down

KV, what do you think about this? (Tamil content) Empty KV, what do you think about this? (Tamil content)

Post by Rishi Fri May 24, 2013 10:59 pm

கருணாநிதி சொல்லும் வழி அழிவுப் பாதை – துர்வாசர்






ஜன்னல் வழியே:

மிழையும்
தமிழர்களையும் காப்பதற்காக


தான் அவதாரம் எடுத்திருப்பதாக கருணாநிதிக்கு ஒரு நம்பிக்கை. யாராவது
தூக்கத்தில் ‘தமிழ்’ என்று பிதற்றினால் கூட உடனே கருணாநிதி முரசொலியில்
கட்டுரை எழுத உட்கார்ந்து விடுவார். ஏழரை, எட்டு கோடித் தமிழர்களில்,
தனக்கு மட்டுமே தமிழுணர்வு பீறிட்டுப் பொங்குவதாக அவ்வப்போது காட்டிக்
கொள்வது கருணாநிதிக்கு வாடிக்கையாக உள்ளது.




சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக் கல்வி அமைச்சர், சட்டசபையில் அரசுப்
பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்விக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று
அறிவித்தார். உடனே கருணாநிதி, தமிழைத் தூக்கி நிறுத்த குதிரையில் ஏறிப்
புறப்பட்டு விட்டார். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தைப் பயிற்று
மொழியாக அறிவிப்பதை ஏற்பதற்கில்லை என்று, முழு நீளத்துக்கு நீட்டி முழக்கி,
அறிக்கை வெளியிட்டு விட்டார். தனது கடந்த ஆட்சி காலத்தில் தமிழ்வழிப்
பயிற்சிக்காக என்னென்ன ஏற்பாடுகளெல்லாம் நடந்தன என்பதைப் பட்டியல்
போட்டுள்ளார்.

ஒரு பக்கம் இந்த அரசும், கருணாநிதியுடன் போட்டி போட்டுக் கொண்டு, தமிழ்
அபிமானிகளின் ஓட்டுக்களை இழந்து விடக் கூடாது என்பதற்காக, நீதிமன்றத்தில்
தமிழ், தமிழ்த் தாய்க்குச் சிலை என்றெல்லாம் கூறிக் கொண்டாலும், இன்னொரு
பக்கம் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் முயற்சிகளை
மேற்கொள்வது நல்ல விஷயம். ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது மேடைப்
பேச்சுக்கும், பாமர மக்களின் ஓட்டுக்களை வாங்கவும் ஓரளவு உதவலாம். ஆனால்,
நடைமுறைக்கு ஒத்து வராது.




‘அறம் செய விரும்பு, ஆறுவது சினம்’ என்பதெல்லாம் எஞ்ஜினியரிங் படிப்புக்கோ,
டாக்டர் படிப்புக்கோ உதவாது. சிலப்பதிகாரமும், கம்ப ராமாயணமும் சினிமா
எடுக்கவும், பட்டிமன்றத்தில் பேசவும்தான் லாயக்கு. ஏரோ நாட்டிக்ஸ்
எஞ்ஜினியரிங் படிக்கவோ, ட்ரிபிள்-இ படிக்கவோ உதவாது. பொழுது போகாத வயசான
கிழவர்கள், நேரத்தைப் போக்கிக் கொள்ள வேண்டுமானால் கம்பனின் கவிதைகள்
உதவலாம். கம்பர் சோறு போட மாட்டார்.




நவீன விஞ்ஞான தொழில் நுட்பக் கல்விப் பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்தில்தான்
எழுதப்படுகின்றன. எஞ்ஜினிரியங், மருத்துவப் படிப்புகளுக்கான பாடங்களை
தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்க முடியாது. அது வெட்டி வேலை.
கருணாநிதி போன்றவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, பள்ளிக் கல்வியை தமிழ்
வழியில் படித்தால், உயர் கல்வி வகுப்பில் உள்ள ஆங்கிலப் பாடங்களைப்
புரிந்து கொள்ள முடியாமல் திணற வேண்டியதுதான்.




தமிழ் வழியில் படித்து விட்டு கல்லூரிகளுக்குப் போகும் மாணவர்களுக்கு உதவ
முத்தமிழ் வித்தகர் கருணாநிதியோ, அவரது தி.மு.க. தொண்டர்களோ வரப்
போவதில்லை. கருணாநிதியின் குடும்பத்தார் எல்லாம் ஆங்கில வழிக் கல்வியைக்
கற்றுப் பிழைக்கத் தெரிந்தவர்கள். கலைஞர் டி.வி.யிலேயே கேவலம், சமையல்
குறிப்புகளைக் கூட, டிஸ்ப்ளே செய்யும்போது ஆங்கிலத்திலும் போடுகிறார்கள்.
முடிந்தால் கருணாநிதி அதை நிறுத்தட்டும். நல்ல பழந்தமிழில் சமையல்
குறிப்புகளைப் போடட்டும்.





பள்ளியில் தமிழ் வழியில் படித்தால் உயர் கல்விக்குச் செல்லும்போது,
ஆங்கிலத்திலுள்ள பாடங்களைப் படித்துப் புரிந்து கொள்வது சிரமம் என்பது
பட்டிக்காட்டுக்காரனுக்குக் கூடத் தெரியும். ஆங்கில வழியில் படித்து
முன்னேற நினைப்பது ஒட்டுமொத்த மக்களின் விருப்பம். தனியார் கல்வி
நிறுவனங்கள் ஒன்றும் தமிழை ஒழித்துக் கட்டுவதற்காக ஆங்கிலவழிக் கல்வியைப்
போதிக்கவில்லை. டிமாண்ட் இருக்கிறது. அதனால்தான் தனியார் பள்ளிகள் ஆங்கில
வழிக் கல்வி முறையை அமல்படுத்துகின்றன.




‘ஹிந்தி ஒழிப்பு’ என்ற பேரில் தமிழர்கள் ஹிந்தியைப் படிக்க விடாமல் செய்தது
இதே கருணாநிதியும் அவரது தம்பிகளும்தான். இப்போது ஆங்கிலத்தையும்
ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறார் கருணாநிதி! கருணாநிதியின் தமிழ்ப் பற்று
அவசரத்துக்கு முதுகு சொறியக் கூட உதவாது. தன்னுடைய குடும்பத்திலும் தனது
தொலைக்காட்சியிலும் தமிழை வளர்க்க முடியாத முத்தமிழ் வித்தகர், ஊர் ஜனங்களை
ஏமாற்ற ‘தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழிக் கல்வி’ என்று கூப்பாடு
போடுகிறார். கருணாநிதியின் பேச்சைக் கேட்டால் தமிழர்கள் திருவோடுதான் ஏந்த
வேண்டும்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum