Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மணமகள் கவரிங் நகை அணிந்து வந்ததால் நின்றது திருமணம்

Go down

 மணமகள் கவரிங் நகை அணிந்து வந்ததால் நின்றது திருமணம் Empty மணமகள் கவரிங் நகை அணிந்து வந்ததால் நின்றது திருமணம்

Post by Rishi Wed Jul 10, 2013 10:43 pm

By dn, விருதுநகர்
First Published : 11 July 2013 03:53 AM IST
விருதுநகரில் முகூர்த்தத்திற்கு மணமகள் கவரிங் அணிந்து வந்ததால் திருமணம் நின்றுபோனது. இதுகுறித்து இருவீட்டாரிடையே ஏற்பட்ட தகராறில் மணமகன் மண்டை உடைந்தது. இதுதொடர்பாக மணமகனின் தாயாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் காந்திபுரம் தெருவைச் சேர்ந்தவர் சமுத்திரவள்ளி. பி.எஸ்.என்.எல் ஊழியரான இவரது மகன் துரைமுருகன் (33), சென்னையில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் மதுரை சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் பாக்கியமுத்து மகள் சகுந்தலாதேவி(25)க்கு  திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். திருமணத்துக்காக 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் தருவதாகப் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது. 
அதன்படி, புதன்கிழமை திருமண விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விருதுநகர் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே உள்ள தனியார் மண்டபத்திலும், சுப்பிரமணியர் கோயிலில் முகூர்த்தம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இருவீட்டாரின் உறவினர்கள் முதல்நாள் இரவே மண்டபத்துக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை முகூர்த்தத்திற்காக சுப்பிரமணியர் கோயில் வளாகத்திற்கு வந்த மணமகள், தங்க நகை அணிந்து வராமல், கவரிங் நகை அணிந்து வந்துள்ளார். இதனால் இருவீட்டாரிடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, மணமகன் வீட்டார் உடனே நகை, பணத்தை எடுத்து வைக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில், மணமகன் துரைமுருகனுக்கு மண்டை உடைந்தது. உடனே அவரை சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், பெண் வீட்டார் திருமண மண்டபத்துக்குச் சென்று பிளக்ஸ் பேனரை கிழித்தும், விருந்துச் சாப்பாட்டை கீழே கொட்டியும் சேதப்படுத்தினர்.
இதுதொடர்பாக பெண் வீட்டார் சூலக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணமகனின் தாயார் சமுத்திரவள்ளியைக் கைது செய்தனர்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum