வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாது:கருணாநிதி
Page 1 of 1

சென்னை:"டேய் வா இங்கே' என்று பேசக்கூடாது என, தி.மு.க., தலைவர், கருணாநிதி, திருமண நிகழ்வில் அறிவுரை வழங்கினார்.
வீரபாண்டி ஆறுமுகம் மகன், ராஜாவின் மகள் மலர்விழி - செந்தில் ஆனந்த் திருமணத்தை, தி.மு.க., தலைவர், கருணாநிதி, சென்னையில் நேற்று நடத்தி வைத்து பேசியதாவது:வீரபாண்டி ஆறுமுகத்தின் விடாமுயற்சி, யாருக்கும் பணியாத மான உணர்ச்சி பற்றி எல்லாம் குறிப்பிட்டு, அவர் வழியில், அவரது மகன், ராஜா விளங்குகிறார் என, சிலர் குறிப்பிட்டனர். அதற்கு உதாரணமாக, யாரையும், "டேய் வா இங்கே' என, சொல்கின்ற அந்த அதிகாரத் தொனி, வீரபாண்டி ஆறுமுகத்தைப் போல, அவருடைய மகன், ராஜாவுக்கும் அமைந்திருக்கிறது என, கூறினர்.
இதிலே நான் மாறுபடுகிறேன்; அது வீரத்தொனி என, சொல்ல மாட்டேன். "இங்கே வாடா... போடா...' என்று சொல்வதெல்லாம், இந்த காலத்தில் அகம்பாவத் தொனி; அது மமதையில் சொல்லப்படுகிற வார்த்தை; உள்ளபடியே அப்படி பேசி இருந்தால், இனியாவது அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். இதை அவருக்கு, அறிவுரையாகக் குறிப்பிட விரும்புகிறேன்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=711812

Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum