பிரபாகரன் மீண்டும் வருவார்?
2 posters
Page 1 of 1
பிரபாகரன் மீண்டும் வருவார்?
எங்களுடன் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய
புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த ஓரிரு
நிமிடத்திற்குள்ளாகவே அநியாயத்துக்குக் கொந்தளித்துத் தீர்த்து விட்டார்.
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவரை நாங்கள் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.
அப்படி ஏன் கொந்தளித்தார் அவர்?
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவ ஆட்சி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு
ஒன்று வெளிநாட்டில் உள்ள தமிழர்களால் வைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள்
எல்லோர் முகத்திற்கு நேராகவும் துப்பாக்கி இருப்பதுபோன்ற ஒரு சித்தரிப்பு
அது. ஆனால், அப்படி ஏதும் இங்கு இல்லை. முன்பு புலிகள் துப்பாக்கியுடன்
நடமாடினார்கள். இப்போது ராணுவத்தினர் நடமாடுகிறார்கள். அப்போது வேலை
கிடையாது. சாலை கிடையாது. மின்சாரம் கிடையாது. பயணம் கிடையாது. இப்போது
எல்லாம் இருக்கிறது. 2009-ல் இறுதிப் போர் முடிந்த சில காலத்திற்கு ராணுவ
நெருக்கடி இருந்தது உண்மை. ஆனால், இப்போது அந்த அளவு இல்லை. படிப்படியாகக்
குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது காலம் கழிந்தால், இலங்கையின் பிற
மாகாணங்களைப் போல் நாங்களும் முழுச் சுதந்திரமாக இருக்க முடியும் என்று
நம்பி கொண்டிருக்கிறோம்.
“அந்த நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுவது புலம் பெயர்ந்த தமிழர்களும்,
தமிழகத்திலுள்ள சில அரசியல்வாதிகளும்தான். அவர்களுக்கெல்லாம் இலங்கைத்
தமிழர் என்றால், அது புலிகள் மட்டும்தான். அவர்கள் எடுத்த எல்லா மடத்தனமான
முடிவுகளுக்கும் ஜால்ரா தட்டியவர்கள். இங்குள்ள வெகுஜனத்தின் கருத்து மீது
அக்கறையில்லாதவர்கள். சண்டை போட வலு இல்லாதவர்கள். சினிமா ஹீரோ சண்டை
போட்டால் விஸில் அடிப்பார்களே, அதைப் போன்ற விஸிலடிச்சான் குஞ்சுகள்.
அடிமைகளைச் சிங்கத்தோடு சண்டை போடவிட்டு, ‘சபாஷ்... அப்படித்தான்’ என்று
உற்சாகக் குரல் எழுப்பிய சில கொடுங்கோல் மன்னர்களுக்கு இணையானவர்கள்
அவர்கள். புலிகளின் சண்டையை ‘தமிழனின் வீரம்’ என்று சிலாகித்து விட்டு,
அவரவர் நாடுகளில் பத்திரமாக இருப்பவர்கள். இங்கே பெற்றோர்களையும்,
பிள்ளைகளையும், சகோதர, சகோதரிகளையும் இழந்து நிற்பது நாங்கள். சுமார் 30
ஆண்டுகள் இருட்டிலும், பதுங்கு குழிகளிலும் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்
நாங்கள்.
“எங்கள் நிம்மதியைத் தொலைத்தவர்கள் புலிகள். எத்தனையோ கட்டங்களில்,
எத்தனையோ தீர்வுகளுக்கு யார் யாரோ உதவ முன் வந்தனர். ஆனால், எதற்கும்
புலிகள் உடன்படவில்லை. மயானத்தில் அமைதி என்கிற மாதிரி, அவர்களின்
அழிவுக்குப் பிறகுதான் ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது. இப்போதுதான்
எல்லோரையும் போல நாங்களும் சகஜமான ஒரு வாழ்க்கையைத் தேடிக்
கொண்டிருக்கிறோம். அதையும் மேற்சொன்ன நபர்கள் குலைக்கப் பார்க்கிறார்கள்.
புலிகளின் தோல்வியை ஜீரணிக்க முடியாத அவர்கள், ‘பிரபாகரன் பத்திரமாக
இருக்கிறார். மீண்டும் வருவார். மீண்டும் தமிழீழம் மலரும்’ என்று
தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். நள்ளிரவில் காட்டு
வழி போகிறவர்கள், பயத்தில் விஸிலடித்துக் கொண்டே போவதைப் போன்ற அவர்களின்
இந்த வீரவசனம், எங்களைத்தான் மேலும் பாதிக்கும் என்பதை அவர்கள் கொஞ்சமும்
உணரவில்லை.
“படிப்படியாகக் குறைந்து வரும் ராணுவ நெருக்கடி, மென்மேலும் குறைந்து
நாங்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யாமல், ‘பிரபாகரன் திரும்பி வருவார். ஈழம்
மலரும்’ என்று சொல்வதன் மூலம், ‘ராணுவமே! அதற்கு இடம் கொடுக்காமல்,
தமிழர்களை எச்சரிக்கையோடு கண்காணித்துக் கொண்டே இரு. அவர்களுக்கு மேலும்
நெருக்கடி கொடுத்துக் கொண்டே இரு’ என்று மறைமுகமாக ராணுவத்துக்குச் சொல்வது
போலத்தான் இருக்கிறது. ராணுவ ஆட்சி நடக்கிறது என்று முதலை கண்ணீர்
விடுக்கும் அவர்கள்தான், ராணுவ நடவடிக்கை குறைந்து விடக்கூடாது என்று
பாடுபட்டு வருகிறார்கள்” என்று கொந்தளித்தார் அவர்.

Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: பிரபாகரன் மீண்டும் வருவார்?
Are gun weilding ng Sihala soldiers nearby during this conversation?
Kayalvizhi- Posts : 3659
Join date : 2011-05-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum