Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Dalits in Sri Lanka

Go down

Dalits in Sri Lanka  Empty Dalits in Sri Lanka

Post by Rishi Wed Jun 26, 2013 10:44 pm

இங்கும் கூட பல கிராமங்களில் தலித் மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தெருவில் செருப்பு போடக் கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது, சைக்கிள்களை உருட்டிக் கொண்டுதான் போக வேண்டும், தேர்தலில் நிற்கக் கூடாது, காதல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று இன்னமும் பல கிராமங்களில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த அளவுக்கா வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் அங்கு ஒடுக்கப்பட்டு இருந்தார்கள்? இங்கு ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காக நாம் என்ன தீர்வு காண்கிறோம்? தீண்டாமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வருகிறோம். அவர்களுக்குக் கல்வி வாய்ப்பில், வேலை வாய்ப்பில் சலுகைகள் தந்து முன்னேற்றி விட முயல்கிறோம். அந்த ரீதியில்தான் அங்குள்ள மக்களுக்கும் சம நீதி கிடைக்க நாம் முயல வேண்டும். அதை விட்டுவிட்டு ஏன் தனி நாடு கோரிக்கை?

இப்போது இலங்கை அரசாங்கத்துக்கு உலக நாடுகள் குறித்து ஒரு பயம் இருக்கிறது. சர்வதேசப் பிரதிநிதிகள் அவ்வப்போது இலங்கைக்கு வருகிறார்கள். தமிழ் மக்களோடு இணக்கமாக இருந்தால்தான் அவர்கள் வரும்போது, தமிழ் மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பேசுவார்கள் என்று இலங்கை அரசு செயல்படுகிறது. அந்தத் தைரியத்தில்தான் ‘இங்கு வந்து பாருங்கள்’ என்று எல்லோரையும் அழைக்கிறது இலங்கை அரசு. இந்த தருணத்தையும், இந்த மனோபாவத்தையும் பயன்படுத்தி, தமிழருக்கு அங்கு நல்ல உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு, ‘ஈழம்... ஈழம்...’ என்று அடித்துக் கொண்டால், அது வெற்றியும் பெறாது; அங்குள்ள தமிழர்களுக்கு நலனும் பயக்காது.

ஆறு நாட்கள் நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் உரையாடி விட்டு வந்துதான் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதைச் சொன்னால் ‘நாங்களும்தான் தினசரி யாழ்ப்பாண தமிழர்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் எல்லாம் ஈழம் வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்’ என்று சிலர் கூறுகிறார்கள். அதற்கும் மேல் ஒரு சிலர் அப்படிச் சொல்லியிருந்தால் கூட, அதற்கும் ஒரு காரணம் இருக்கும். அங்குள்ள மக்கள் தமிழக மக்களிடமும் சரி, புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் சரி, உண்மையைச் சொல்வதில்லை. தமிழ்த் துரோகி பட்டம் கிடைத்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். இது குறித்து, இந்தக் கட்டுரைத் தொடரில் பல இடங்களில் நான் குறிப்பிட்டுள்ளேன். ராணுவத்தில் சேர்ந்துள்ள தமிழ்ப் பெண்கள், பழிச் சொல்லுக்குப் பயந்தபடிதான் இருக்கிறார்கள். ‘நாங்கள் சேர்ந்தது தப்பா அண்ணா?’ என்று என்னிடமே அவர்கள் கேள்வி கேட்டதையும் நான் ஏற்கெனவே பதிவு செய்துள்ளேன்.

இலங்கையில் தமிழர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தில் உள்ள அத்தனை தமிழர்களின் ஒருமித்த கருத்தாக இருக்க முடியும். பிறகெப்படி தமிழக மக்களில் தமிழ் உணர்வாளர்கள் (?), தமிழ் துரோகிகள் (?) என்ற பாகுபாடு எழுகிறது? இதே தொப்புள் கொடி உறவான மலேசியத் தமிழர்கள், ‘ஹிண்ட்ராஃப்’ என்ற அமைப்பு மூலமாக சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் சம உரிமை கேட்டுப் போராடினார்கள். அதற்கு இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் ஏன் பெரிய அளவில் கொதிக்கவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை அடுத்த இதழில் பார்க்கலாம்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum