Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

என்று தணியும் இந்த அடிமை மோகம்?

Go down

 என்று தணியும் இந்த அடிமை மோகம்?  Empty என்று தணியும் இந்த அடிமை மோகம்?

Post by Rishi Thu Aug 22, 2013 8:12 pm

[b][color=#000000][font=Times New Roman][color=red]என்று தணியும் இந்த அடிமை மோகம்? [/color][/font][/color][/b]
[color=#004e9b][font=Times New Roman][b]ஐ[/b]ம்பது வருடங்களுக்கு முன்பு அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் ஆர். பசுபதி என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கலெக்டராக இருந்தார். அவர் சட்டம், விதிமுறைகளுக்கு முக்கியத்துவம் தருகிறவர். அதனால் ‘கண்டிஷனான கலெக்டர்’ என்று பேர் எடுத்தார். அவர் ‘இரவில் சைக்கிளில் தலைப்பாகை கட்டிக் கொண்டு ரோந்து சுற்றுவார், பல சமூக விரோதிகளைப் பிடிப்பார்’ என்கிற அளவுக்கு அவரது கண்டிப்பைப் பற்றி மாவட்ட அளவில் அவருக்குப் புகழ் இருந்தது. சில பெரியவர்கள் ‘ஆர்.பசுபதி’ என்றாலே, கண்களில் ஆனந்த பாஷ்யம் வடிய அவரது புகழைப் பாடுவார்கள். 

ஆனால், பசுபதி தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களைத்தான் பயன்படுத்தினார். ஒரு கிராம அதிகாரி தனது கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி மேலதிகாரிகளிடம் ரிப்போர்ட் செய்வதில் என்ன அதிசயமோ, ஆச்சரியமோ இருக்க முடியும்? அது அவரது வேலை. இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? ஆனால், ஆர். பசுபதி ஐ.ஏ.எஸ்.ஸை, அக்கால நெல்லை மாவட்ட மக்கள் வியந்தார்கள், அவரைப் போற்றினார்கள். 

நம் நாட்டில் ஒரு அதிகாரியோ, ஒரு மந்திரியோ தனது பணியைச் செய்தால் அதற்காக மாய்ந்து போகிறோம். அவர்களை மாய்ந்து மாய்ந்து கொண்டாடுகிறோம். ஒருவர் தன் கடமையைச் செய்ததற்காக அவரை எதற்குக் கொண்டாட வேண்டும் என்று இந்தியர்கள் யோசிப்பதில்லை. 

டி.என். சேஷன் தேர்தல் அதிகாரியாக இருந்தபோது, அவர் தேர்தல் கமிஷனின் அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தினார். அந்த அதிகாரங்களை அவர் தன் வீட்டிலிருந்து கொண்டு வரவில்லை. ஏற்கெனவே இருந்தவைதான். அவற்றை அவர் அமல்படுத்தினார். உடனே அகில இந்தியாவும் அவரைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இதில் கொண்டாடுவதற்கும், வியப்பதற்கும் என்ன இருக்கிறது? ஒருவர் தன் வேலையை ஒழுங்காகச் செய்தால், அதற்கு எதற்குக் கொண்டாட்டம்? 

யாராவது ஒரு அதிகாரி சட்டங்களை முறைப்படி செயல்படுத்தினால், அவரை அண்ணாந்து பார்த்து வியந்து மாய்ந்து போவது நமது அடிமை புத்தியைத்தான் காட்டுகிறது. 

ஒரு டெய்லர் ஒழுங்காக அளவெடுத்துத் துணிகளைத் தைத்துக் கொடுத்ததற்காக அவரை யாராவது விழுந்து விழுந்து கொண்டாடுவார்களா? சரியாகத் தைத்துத் தருவது ஒரு டெய்லருடைய வேலை. அவரது கடமை. கடமையைச் செய்ததற்கு எதற்குப் பாராட்டு? எதற்கு வியப்பு? 

பொதுவாக இந்தியர்களின் பாமர மனம், அரசியல்வாதிகளை வில்லன்களாகவும், அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற திரு அவதாரம் எடுத்திருப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பாவிக்கிறது. அதனால்தான் தனது பணிகளைச் சரியாகச் செய்யும் அதிகாரிகளை இந்தப் பாமர மனம் விழுந்து விழுந்து கொண்டாடுகிறது. அந்த அதிகாரிகள் மாற்றப்பட்டாலோ, சஸ்பெண்ட் செய்யப்பட்டாலோ அது அழுது ஒப்பாரி வைக்கிறது. [/font][/color]
[color=#004e9b][font=Times New Roman]உ.பி.யில் துர்கா சக்தி நாக்பாலுக்கு நேர்ந்திருப்பது இதுதான். துர்கா சக்தி நாக்பாலின் விஷயத்தில் அகிலேஷ் யாதவ்தான் வில்லன்; அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் கதாநாயகி. அவர் தனது வேலையை, தனது கடமையை ஒழுங்காகச் செய்திருக்கிறார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த மீடியாவும், அவற்றின் வழியே இந்தியாவும் அழுது புலம்புகிறது. அவரது சஸ்பென்ஷன் விஷயத்தை டிரிப்யூனலுக்கு எடுத்துச் சென்று அவர் வழக்காடலாம். இதுதான் இனி நடக்க வேண்டியது. இதில் கடமையைச் சரியாகச் செய்ததற்காக அவரைக் கொண்டாடுவதற்கோ, அல்லது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்காக அழுது புலம்பவோ தேவையில்லை. 

மதுரையில் க்ரானைட் முறை கேடுகளைப் பற்றி அறிக்கை எழுதியதற்காக சகாயம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியையும், பிறகு அந்த ‘க்ரானைட் குவாரி முதலாளிகள் மீது வழக்குத் தொடுத்ததற்காக அன்சுல் மிஸ்ரா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் தலையில் தூக்கி வைத்து மீடியா கொண்டாடியது. அன்சுல் மிஸ்ரா மாற்றப்பட்டதும் மதுரை மாவட்டமே தலைகீழாகக் கவிழ்ந்து விட்ட மாதிரி மீடியா உலகம் அழுது அரற்றியது. கொண்டாடவும் வேண்டாம்; அழுது புலம்பவும் வேண்டாம். இது சாதாரண நிர்வாக நடைமுறை என்பதை, நாம் என்றைக்குத் தெரிந்து கொள்ளப் போகிறோம்? நமது பழைய அடிமை மனோபாவம்தான் இது போன்ற அதீத உணர்ச்சிகளுக்கு ஊற்றுக் கண். 

மதுரை க்ரானைட் வழக்குகள் தொடரத்தான் செய்கின்றன. அன்சுல் மிஸ்ரா போனதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. தூத்துக்குடி முன்னாள் கலெக்டர் ஆஷிஷ் குமார் விஷயத்திலும் இதே கொண்டாட்டமும், அழுகையும் மாறி மாறி மீடியாவினால் தோற்றுவிக்கப்பட்டு, அது மக்களையும் தொற்றிக் கொண்டது. வெள்ளைக்காரர்கள் காலத்திய மனோபாவம், சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் நம்மை விட்டுப் போனபாடில்லை. என்று தணியும் இந்த அடிமை மோகம்? [/font][/color]

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum