இந்தியன் என்றால் என்னது தம்பி...?
2 posters
Page 1 of 1
இந்தியன் என்றால் என்னது தம்பி...?
இந்தியன் என்றால் என்னது தம்பி...? -பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இந்தியன் என்றால்
என்னது தம்பி ?
கொள்ளையன் ஆள்வான் ;
கொடுமைகள் செய்வான் ;
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான் !
வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபா டின்றி
விளங்கிடும் தம்பி !
முந்திய ஆட்சியை
அடிமைஎன் றார்கள் !
முன்னினும் இவர்கள்
அடிமைசெய் தார்கள் !
இந்தியன் என்றால்
என்னது தம்பி ?
இந்தியன் என்றால்
என்னது தம்பி ?
கொள்ளையன் ஆள்வான் ;
கொடுமைகள் செய்வான் ;
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான் !
வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபா டின்றி
விளங்கிடும் தம்பி !
முந்திய ஆட்சியை
அடிமைஎன் றார்கள் !
முன்னினும் இவர்கள்
அடிமைசெய் தார்கள் !
இந்தியன் என்றால்
என்னது தம்பி ?
Kayalvizhi- Posts : 3659
Join date : 2011-05-16
Re: இந்தியன் என்றால் என்னது தம்பி...?
தமிழ்த்தாய் நாணி முகம் சுளித்து
இப்பிரிவினைவாதம் அய்யகோ தமிழிலாவென சினந்து
பாரதத்தாயினின் மஹிமையை வியந்து
கூறினாள்; கேட்பரோ கயல்விழியாரும் உணர்ந்து
இப்பிரிவினைவாதம் அய்யகோ தமிழிலாவென சினந்து
பாரதத்தாயினின் மஹிமையை வியந்து
கூறினாள்; கேட்பரோ கயல்விழியாரும் உணர்ந்து
Kudanthaikaaran- Posts : 32
Join date : 2018-04-30
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|