Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Asra Garg, a smart police officer (Tamil content) அதிரடி ஆக்ஷன்

Go down

Asra Garg, a smart police officer (Tamil content) அதிரடி ஆக்ஷன் Empty Asra Garg, a smart police officer (Tamil content) அதிரடி ஆக்ஷன்

Post by Rishi Mon Oct 14, 2013 8:19 pm

உடுமலை, சிவசக்தி காலனியைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 38; இவரது மனைவி அங்கயற்கண்ணி. இவர், தனது கணவர், சுமதி என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்டு தன்னை துன்புறுத்துவதாக, இரு மாதங்களுக்கு முன், உடுமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். மணிவண்ணன் மற்றும் சுமதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மணிவண்ணன், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார். இந்நிலையில், உடுமலை போலீஸ் சட்டம் - ஒழுங்கு எஸ்.ஐ., பூர்ணிமா, இவ்வழக்கிலிருந்து சுமதியை விடுவிக்க மணிவண்ணனிடம் 1 லட்சம் ரூபாய் பேரம் பேசினாராம். இதுகுறித்து, கடந்த 12ம் தேதி மணிவண்ணன், திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கிடம் முறையிட்டார். எஸ்.பி., ஆஸ்ரா கர்க், எஸ்.ஐ.,க்கு லஞ்சமாகக் கொடுப்பதற்காக, தன்னிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாயை மணிவண்ணனிடம் கொடுத்தனுப்பினார்; அந்த நோட்டுகளின் சீரியல் எண்களை குறித்து வைத்துக்கொண்டார்.



"நீங்கள் கேட்டவை': பின்னர் அவர், தன்னை யாரும் அடையாளம் கண்டு விடாதபடி, "டி சர்ட் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்' சகிதமாக சாதாரண உடையில், வாடகை காரில் கிளம்பி மணிவண்ணனுடன், அன்று இரவே உடுமலைக்கு வந்தார். உடுமலை நகர போலீஸ் ஸ்டேஷன் அருகில் கார் நின்றது. எஸ்.ஐ., பூர்ணிமாவை போனில் தொடர்பு கொண்ட மணிவண்ணன், "நீங்கள் கேட்ட தொகையில் ஒரு பகுதியை கொண்டு வந்துள்ளேன்...' என தெரிவித்துள்ளார். அதற்கு எஸ்.ஐ., பூர்ணிமா, "நான் வாகன தணிக்கை பணியில் உள்ளேன்; ஸ்டேஷனுக்கு வந்த பின் பணத்தைப் பெற்றுக்கொள்கிறேன்...' எனத் தெரிவித்துள்ளார். இந்த உரையாடலை மணிவண்ணன் தனது மொபைல் போனில், "லவுட் ஸ்பீக்கரில்' போட்டு ஒலிபரப்ப, அதை எஸ்.பி., கேட்டுள்ளார்.


மொபைல் ஜாலம்: அடுத்த சில நிமிடங்களில் ஸ்டேஷனுக்கு வந்த எஸ்.ஐ., பூர்ணிமா, மணிவண்ணனை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். அவர் உள்ளே செல்லும் போதே, எஸ்.பி., யின் மொபைல் போனுக்கு, தனது மொபைல் போனிலிருந்து "கால்' செய்து விட்டு போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார். இருவரின் பேச்சையும் தனது போன் மூலமாக எஸ்.பி., கேட்டுள்ளார். பணத்தை, ஸ்டேஷனில் போலீசாருக்கு உதவியாக எழுத்துப் பணிகளை செய்து வரும் ரபீக் என்ற இளைஞரை வரவழைத்து, அவரிடம் கொடுக்குமாறு எஸ்.ஐ., தெரிவித்துள்ளார். ரபீக்கிடம் பணம் கொடுக்கப்பட்டது. அடுத்த கணமே எஸ்.பி., ஆஸ்ரா கர்க், அதிரடியாக ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். நேரடியாக எஸ்.ஐ., அறைக்குள் எஸ்.பி., சென்றதும், அங்கு நின்று கொண்டிருந்த எஸ்.ஐ., பூர்ணிமா, ரபீக்கிடமிருந்து பணத்தை வாங்கியபடி "யார் உள்ளே வருவது?' எனக் கேட்டுள்ளார். எஸ்.பி., ஆஸ்ரா கர்க் எனத் தெரிந்ததும், எஸ்.ஐ., அதிர்ச்சியில் உறைந்தார். வேகமாகச் செயல்பட்ட எஸ்.பி., ஸ்டேஷனில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கனகராஜை அழைத்து, எஸ்.ஐ., பூர்ணிமாவிடம் கைப்பற்றப்பட்ட பணத்தின் சீரியல் எண்களையும், தான் குறித்து வைத்திருந்த எண்களையும் காண்பித்து ஒப்பிட்டு பார்க்க உத்தரவிட்டார்; சீரியல் எண்கள் ஒத்துப்போயின. எஸ்.ஐ., பூர்ணிமா மற்றும் ரபீக் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற எஸ்.பி., பெண் எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்தார். எஸ்.பி.,யின் இந்த "அதிரடி ஆக்ஷன்' இரவு 8.45க்கு துவங்கி 9.30 மணிக்கு முடிந்துள்ளது. அடுத்தது யார் தலை உருளுமோ? என்ற பீதியில் உள்ளனர், திருப்பூர் மாவட்ட போலீசார்.








http://www.dinamalar.com/News_detail.asp?Id=486574

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum