Dr, JJ's compassion for animals (Tamil content)
3 posters
Page 1 of 1
Dr, JJ's compassion for animals (Tamil content)
கோவையில் வரும் 19 முதல் 98 யானைகளுக்கு புத்துணர்வு முகாம்: ஜெயலலிதா
By dn, சென்னை
First Published : 15 December 2013 01:13 AM IST
கோவை மாவட்டத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் 98 யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு திருக்கோயில்களில் உள்ள யானைகளுடன் வனத்துறைக்குச் சொந்தமான யானைகளுக்கும் இந்த முகாம் நடத்தப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த 2003 ஆம் ஆண்டில் 55 யானைகளுக்கு 30 நாள்களும், 2004 ஆம் ஆண்டில் 65 யானைகளுக்கு 45 நாள்களும், 2005 ஆம் ஆண்டில் 63 யானைகளுக்கு 48 நாள்களும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் யானைகளின் உடல்நலம் பேணப்பட்டு புத்துணர்ச்சி அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. யானைகளுக்கு சிறப்பு உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன.
இந்த நலவாழ்வு முகாம் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடத்தப்படவில்லை. இதனால் யானைகளின் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் 37 யானைகளுக்கு 48 நாள்களும் கடந்த நிதியாண்டில் 35 யானைகளுக்கு 48 நாள்களும் புத்துணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு 98 யானைகள்: இந்த ஆண்டு திருக்கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான யானைகளுக்கு நலவாழ்வு முகாம் நடத்தப்படுவதைப் போன்றே, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும் முகாம் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதில் திருக்கோயில்களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான 43 யானைகள் மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 55 யானைகள் என மொத்தம் 98 யானைகள் பங்கு பெறும். இதற்காக செலவிடப்படும் ரூ.1.53 கோடியை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
யானைகளை வற்புறுத்தக் கூடாது...
யானைகளுக்கான சிறப்பு முகாம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சிறப்பு முகாமுக்கு வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தி அழைத்துச் செல்ல வேண்டியதில்லை. நோயுற்று இருக்கும் யானைகளையும் முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். இப்போது இருக்கும் இடத்திலேயே அந்த யானைகளுக்கும் முகாமில் வழங்கப்படுவது போன்ற உணவு, மருத்துவ வசதி ஆகியன வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: Dr, JJ's compassion for animals (Tamil content)
Animal cruelty is not just towards temple elephants but related to all animals. Very little is being done in India. I see oxen in skin and bones pulling carts where the driver keeps beating them up. Mange-ridden street dogs getting no help. Not to mention poverty stricken people treated so cruelly by the society.
goodcitizn- Posts : 3263
Join date : 2011-05-03
Re: Dr, JJ's compassion for animals (Tamil content)
Mommy! is herself a pig - with lipstick.
Hellsangel- Posts : 14721
Join date : 2011-04-28
Similar topics
» Tamil Muslim advises Tamil Brahmins to convert (Tamil content)
» Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)
» Tamil women have come a long way (Tamil content)
» Tamil Content -Love for Tamil in Myanmar
» silEdai - a type of pun in tamil (tamil content)
» Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)
» Tamil women have come a long way (Tamil content)
» Tamil Content -Love for Tamil in Myanmar
» silEdai - a type of pun in tamil (tamil content)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum