Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

‘ஹிந்தியை அசைக்க முடியாது’

Go down

 ‘ஹிந்தியை அசைக்க முடியாது’ Empty ‘ஹிந்தியை அசைக்க முடியாது’

Post by Rishi Sat Jan 04, 2014 10:10 pm

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் நாளில் ஹிந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று 1952-ல் ஈ.வெ.ரா. அறிவித்தார். அந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் போராட்டம் நடை பெற்றது. 1954-ஆம் ஆண்டில் குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு, திருச்சியில் கூடிய திராவிடர் கழக கூட்டத்தில் (17.7.1955) இந்திய தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.


போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் நேருவிடம் இது பற்றி பேசியதாகக் குறிப்பிட்டு, முதலமைச்சர் காமராஜ் ஓர் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டதாகவும், போராட்டம் கைவிடப்பட்டதாகவும் ஈ.வெ.ரா. சொல்லி விட்டார்.

ஏற்கெனவே நேரு கொடுத்த உறுதிமொழியைத்தான் காமராஜ் அறிக்கை நினைவூட்டியது. அதில் புதிதாக எதுவும் இல்லை.இருந்தாலும் ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற ரீதியில் ஈ.வெ.ரா.வின் பேச்சு இருந்தது.

எதற்காகப் போராட்டத்தை அறிவித்தார், எந்த நம்பிக்கையில் அதைக் கைவிட்டார் என்பது மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

வளர்ந்து வருகின்ற தி.மு.க.வுக்கு, ஹிந்தி எதிர்ப்பு என்ற பெருமை உண்டாகிறதே என்பதுதான் ஈ.வெ.ரா.வின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்.

ஹிந்தி எதிர்ப்பு என்ற கோஷத்தை உயர்த்தி பிடித்து தி.மு.க. முன்னேறுவது ஈ.வெ.ரா.வுக்கு உவப்பாக இல்லை. சென்னை கடற்கரையில் 2.6.1963-ல் நடந்த கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசினார்:

“இந்தியா யூனியனாக இருக்கும் வரை ஹிந்தியை அசைக்க முடியாது. இன்றைய ராஜ்யம் அவர்களுடையது. நாம் ஒண்டிக் குடியாக இருக்கிறோம். மெஜாரிட்டி அவர்கள். அசைக்க முடியும் என்றால், பலாத்காரத்தில் இறங்க வேண்டும். அவ்வளவு தூரம் போவதற்கு இப்போது அவசியம் தோன்றவில்லை. ஆகவே ஹிந்தியைப் பற்றிப் பேசுவது வீண் என்று முடிவு செய்து விட்டேன்” – என்றார் ஈ.வெ.ரா..

தி.மு.க.வால் தூண்டப்பட்டு, ஹிந்தி அரக்கி என்ற பொய் பிம்பம் தமிழகத்தில் பூதாகரமாக்கப்பட்டு, மாணவர்களின் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தபோது, ஈ.வெ.ரா. பேசியது இது (மே, 1965):


“ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற காலித்தனம்... தமிழ்நாட்டில் எங்கே உள்ளது ஹிந்தி? யார் வீட்டுப் பையனை ஹிந்தி படி என்று எந்தப் பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்டக்கார அரசியல்வாதிகளும் ஹிந்தி கட்டாயம் என்று கட்டிவிட்டது கண்டு, எல்லா மக்களும் சிந்திக்காமல் ஹிந்தி ஹிந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?

“ஆரம்பத்திலே நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால், இந்த நாச வேலைகளும் இத்தனை உயிர்ச் சேதமும் உடமைச் சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காகச் சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்...” என்று பேசி, தன் ஆத்திரத்தைக் கொட்டினார் ஈ.வெ.ரா..

ஈ.வெ.ராவின் அரசியல் கொள்கைக்கு எந்த லாஜிக்கும் கிடையாது என்பதை, அவரைப் பொறுத்தவரை தெளிவாகவே சொல்லிவிட்டார். அவரை நம்புகிறவர்கள் நஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum