Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

The hypocrisy of the communist party leaders in TN (Tamil content)

Go down

The hypocrisy of the communist party leaders in TN (Tamil content) Empty The hypocrisy of the communist party leaders in TN (Tamil content)

Post by MulaiAzhagi Fri Aug 10, 2012 3:29 pm

லேசியாவில் உள்ள இந்தியர்கள் கடந்த சில வருடங்களாக தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். இதற்காக ‘ஹிண்ட்ராஃப்’ அமைப்பை அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, முன்பொருமுறை தமிழகத்திற்கு வந்து இங்குள்ள அரசியல் தலைவர்களைச் சந்தித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியனை இவர்கள் சந்தித்தபோது, அமைப்பின் பெயரில் உள்ள ஹிந்து என்ற சொல்லை நீக்கிவிடும்படி அவர் அறிவுறுத்தினார். மலேசியாவில் உள்ள முக்கியமான பிரச்னையே ஹிந்துக் கோவில்களை இடிப்பதும், ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதும்தான் என்பது அவருக்கு உறைக்கவே இல்லை.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரோடு தா. பாண்டியனின் கட்சிக்கு இணக்கமான உறவு இருக்கிறது. இஸ்லாமியர்களின் உரிமைகள் இங்கே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தா. பாண்டியனும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கறாராக இருக்கிறார்கள். இது நல்லதுதான். ஆனால் மலேசியாவில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள் தங்களுக்கென்று ஒரு அமைப்பை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கருதுவது, எந்த விதத்தில் நியாயம் என்பது புரியவில்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தார்மீகமற்ற இந்த நிலைப் பாட்டுக்குக் காரணம் திராவிட மாயைதான். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய தனித்தன்மையை இழந்து மாமாங்கமாகி விட்டது. ஹிந்து சமுதாயத்திற்கு எந்த உரிமையும் வழங்கப்படக் கூடாது என்ற திராவிட இயக்கங்களின் கோட்பாட்டை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டு விட்டது. ஆனால், இதே கட்சி தேசியத்தின் பக்கமாக அணிவகுத்த காலம் ஒன்று இருந்தது. கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று திராவிட இயக்கத்தவர் சொன்னபோது, அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தவர் ஜீவா. திருச்சியில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் ‘மஹாபாரத, ராமாயண புராணக் குப்பைகளை எல்லாம் கொளுத்த வேண்டும்’ என்று ஈ.வெ.ரா. பேசியபோது, அந்த மேடையிலேயே அவருக்குப் பதிலடி கொடுத்தார் முற்போக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன்.

MulaiAzhagi

Posts : 1254
Join date : 2011-12-20

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum