Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Maria, what do you think about this? (Tamil Content)

3 posters

Go down

Maria, what do you think about this? (Tamil Content) Empty Maria, what do you think about this? (Tamil Content)

Post by MulaiAzhagi Mon Aug 13, 2012 9:45 pm

ஹிந்து மதத்தில் ஒரு காலத்தில் நிலவிய தீண்டாமையைச் சுட்டிக் காட்டி பாதிரியார்கள் பிரசாரம் செய்தனர். அவர்கள் விட்ட இடத்தில் திராவிட இயக்கத்தினர் தொடருகின்றனர். ஆனால், கிறிஸ்தவத்தில் உள்ள தீண்டாமையைப் பற்றி உடன்பிறப்புகள் ஓசை எழுப்புவதில்லை. இதுபற்றிய விவரங்களை நாம் பார்க்கலாம்.

கேரளத்து சிரியன் கிறிஸ்தவ தேவாலயங்களில் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தார்கள். இதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாழ்த்தப்பட்டவர்கள் அங்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களைப் பார்த்தவுடனே உள்ளே இருந்தவர்கள் ஜன்னல்கள் வழியாகக் குதித்து வெளியேறி விட்டார்கள். சில இடங்களில் முதலில் உள்ளே விட மறுத்தார்கள். பிறகு உள்ளே வந்தாலும் சமமாக உட்காரக் கூடாது என்றார்கள். இது பற்றித் தெரிந்து கொள்ள ஆனந்தரெங்கப் பிள்ளையைப் படிக்க வேண்டும்.

புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரெங்கம் பிள்ளை (1709-1761), ஃபிரெஞ்சுக்காரர்களிடம் துபாஷியாகப் பணியாற்றினார். மொழி பெயர்ப்பாளரை அப்போது துபாஷ் என்று அழைப்பது வழக்கம். துவி பாஷி என்ற ஸம்ஸ்கிருதச் சொல் இரண்டு மொழிகள் தெரிந்தவரைக் குறிக்கும். அது காலப் போக்கில் துபாஷியாகி விட்டது.

ஆனந்தரெங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு ஒரு முக்கிய சரித்திர ஆவணமாகக் கருதப்படுகிறது. இந்த நாட்குறிப்பில் “கத்தோலிக்கர்களாக மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிறிஸ்தவ தேவாலயத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களையும் மற்றவர்களையும் பிரிக்கும்படி தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருந்தது” என்று அவர் எழுதியிருக்கிறார்.

இதேபோல் கட்டப்பட்ட இன்னொரு தடுப்புச் சுவரை இடிப்பதற்கு பதினாறு ஆண்டு காலம் வழக்கு நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கன் குளம் என்ற கிராமத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் அமைப்பே வித்தியாசமாக இருந்தது. இரண்டு ஜாதிக்காரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விடக்கூடாது என்பதற்கான ஏற்பாடு அது.

இந்த தேவாலயத்துக்குக் கால் சட்டை ஆலயம் என்று பெயர். பலி பீடம் மட்டும் இரண்டு பிரிவினருக்கும் பொதுவாக இருக்கும். ஆனால், ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரைப் பார்க்க முடியாதபடி தடுப்புச் சுவர் இருந்தது.


தடுப்புச் சுவரை இடிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தாழ்த்தப்பட்டர்கள் முன்வைத்தனர். மற்ற பிரிவினர், தடுப்புச் சுவருக்கு ஆதரவாகப் பேசினர். திருநெல்வேலி துணை நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும், பிறகு உயர்நீதி மன்றத்திலும் பதினாறு ஆண்டுகள் வழக்கு நடந்தது. நேபியர் என்ற ஆங்கிலேயரும், சதாசிவ ஐயரும் 1916-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பின்படி தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது.

பிராமணர்கள் அனைவரும் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்று நூறாண்டு காலமாக திராவிட இயக்கத்தினர் சொல்லி வருகிறார்கள். நீதிபதி சதாசிவ ஐயர் 1916-ல் வழங்கிய தீர்ப்பு பற்றி தங்களுடைய கருத்து என்ன என்பதை, இவர்கள் தெளிவாக்கினால் நல்லது.

தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில், சமீப காலம் வரை ஒரு கல்லறையில் ஜாதிக் கிறிஸ்தவர்களுக்குத் தனி இடம் என்றும், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்குத் தனி இடம் என்றும் பிரித்து சுவர் கட்டப்பட்டிருந்தது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எறையூரில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கும், கிறிஸ்தவ தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கத்தோலிக்க சபையின் 21 தேவாலயங்களில் வழிபாடு நடத்த முடியாத நிலைமை உண்டானது.

ஹிந்து மதத்தில் உள்ள குறைபாடுகளைப் பூதாகரமாக்கிப் பேசும் திராவிட இயக்கத்தினர், கிறிஸ்தவ மதத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தும் உரிமைப் போராட்டங்கள் பற்றி வாய் திறக்கும் வழக்கமே இல்லை.

திராவிட இயக்கத்தவர்களின் கவனத்துக்காக ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். சைவ நெறிமுறைகள் வெகுவாகப் போற்றப்படும் இலங்கைத் தமிழர்களிடையேயும், பாதிரிமார்கள் மதமாற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். ஆறுமுக நாவலர் (1822-1879) போன்ற அறிஞர்களால் இந்த முயற்சி ஓரளவு முறியடிக்கப்பட்டது.

சைவத்தைக் கண்டித்து கிறிஸ்தவர்கள் பல பிரசுரங்களை வெளியிட்டார்கள். இதை மறுப்பதற்காக நாவலர் ‘சைவ தூஷண பரிகாரம்’ என்ற நூலை எழுதினார். நாவலரின் புத்தகத்தைப் பற்றி வெஸ்லியன் திருச்சபையின் 1855-ஆம் ஆண்டு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

“அது அசாதாரண இலக்கியம். கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து ஆணித்தரமாக சைவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் நூல். அது கிறிஸ்தவ சமயம் முறையற்றது, பயனற்றது என்று சொல்லவில்லை. சைவச் சடங்குகளை உயர்த்திப் பேசவில்லை. இரண்டிற்கும் நடுவே இரு சமயங்களையும் எதிரெதிரே வைத்து கிறிஸ்தவ ஆகமத்திற்குச் சரியான சைவாகமங்களைக் காட்டி, அதற்கு இது குறையொன்றுமில்லையே? சைவத்தை விட கிறிஸ்தவ மதத்தில் என்ன விசேஷம் இருக்கிறது என்பதை எடுத்து அலசுகிறது. முதல் தரமான மூளைதான் இதை எழுதியிருக்க வேண்டும்” என்கிறது அந்த அறிக்கை.

சைவத்தால் இத்தகைய சம பாவம் சாத்தியம் என்பதைத் திராவிட இயக்கத்தினர் உணரவில்லை; உணர்ந்தாலும், உணர்ந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை!

MulaiAzhagi

Posts : 1254
Join date : 2011-12-20

Back to top Go down

Maria, what do you think about this? (Tamil Content) Empty Re: Maria, what do you think about this? (Tamil Content)

Post by Maria S Tue Aug 14, 2012 9:55 am

Good Morning Sara!

Appreciate the question.

Here's my take:

*In regards to Indian Christian communities (in Tamil Nadu) there are still plenty of challenges/problems related to Caste discrimination- external and internal. I have been a vocal critic of this..one can't do anything about "self-segregation"..people/groups have the choice to associate themselves with who they want to..as long as no one's rights-opportunities are suppressed, because of caste (as it has historically been done).

*I don't think one can blame the Dravidian movement for what some Christians do..I will blame the Christians for that..we can't rewrite history, and I can only guess if the status quo continued as it was before the Dravidian movement- and it was not good on so many levels. I will give a lot of credit to the Dravidian movement for societal changes-and since "power corrupts"..the current Dravidian party leaders..have taken full advantage of their power and positions- are corrupt/power hungry..will blame them for that.


Finally- two wrongs don't make it fair or right.


Last edited by Maria S on Tue Aug 14, 2012 10:02 am; edited 1 time in total
Maria S
Maria S

Posts : 2879
Join date : 2011-12-31

Back to top Go down

Maria, what do you think about this? (Tamil Content) Empty Re: Maria, what do you think about this? (Tamil Content)

Post by Propagandhi711 Tue Aug 14, 2012 10:01 am

Maria S wrote:
Good Morning Sara!

Appreciate the question.

Here's my take:

*In regards to Indian Christian communities (in Tamil Nadu) there are still plenty of challenges/problems related to Caste discrimination- external and internal. I have been a vocal critic of this..one can't do anything about "self-segregation"..people/groups have the choice to associate themselves with who they want to..as long as no one's rights-opportunities are suppressed, because of caste (as it has historically been done).

*I don't think one can blame the Dravidian movement for what some Christians do..I will blame the Christians for that..we can't rewrite history, and I can only guess if the status quo continued before the Dravidian movement- and it was not good on so many levels. I will give a lot of credit to the Dravidian movement for societal changes-and since "power corrupts"..the current Dravidian party leaders..have taken full advantage of their power and positions- are corrupt/power hungry..will blame them for that.


Finally- two wrongs don't make it fair or right.

good morning maria. what big titties wants to hear when he poses these seemingly goofball questions out of the left field is this: yes, brahmins are not responsible for creation and perpetration of the caste system and all it's ills in india. well, maybe brahmins started it on a lark but they moved away from it and is currently being perpetrated by rest of you people. that's the grand answer he's hoping to elicit from you folks.

Propagandhi711

Posts : 6941
Join date : 2011-04-29

Back to top Go down

Maria, what do you think about this? (Tamil Content) Empty Re: Maria, what do you think about this? (Tamil Content)

Post by Maria S Tue Aug 14, 2012 10:06 am



Good Morning DUT!

Nice to see you as always!

Sara is trying to be Sara!
Maria S
Maria S

Posts : 2879
Join date : 2011-12-31

Back to top Go down

Maria, what do you think about this? (Tamil Content) Empty Re: Maria, what do you think about this? (Tamil Content)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum