Dalits in a TN church (Tamil contente)
Page 1 of 1
Dalits in a TN church (Tamil contente)
எங்கள் ஊர் சிறிய ஊர் வழக்கமான கிறிஸ்துவ சாதி அமைப்பில் ஆதி திராவிட கிறிஸ்துவர்கள் ஏழைகளாகவும் , கூலி வேலை செய்கிறவர்களாகவும் இருந்தார்கள். முதலியார் கிறிஸ்துவர்கள் சர்ச்சின் நிர்வாக அமைப்பில் முழுவதுமாய் இருந்தார்கள். பில்லாவடந்தை சர்ச் மிகப்பெரிய சர்ச். அந்தப்பகுதியின் பத்துக்கு மேற்பட்ட சிற்றூர்களுக்கு உள்ள சர்ச். கிட்டத்தட்ட 25 வேலி அளவிற்கான நிலம் அதற்கு இருந்தது ( இப்போதும் இருக்கிறது விற்றது போக மீதம் ). முதலியார்கள் நிலசுவாந்தாரர்களாகவும் சர்ச்சின் நிர்வாகிகளாகவும் இருந்ததால் தன் நிலத்தில் கூலிகளாய் வேலை செய்கிறவர்கள் தனக்கு சமமாய் சர்ச்சில் அமரக்கூடாதென தியேட்டர் அமைப்பை செய்திருந்தார்கள். பெஞ்சுகளும் முன் வரிசையும் அவர்களுக்குரியது. பின் வரிசையும் வாசலுக்கு வெளி இடமும் ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கு உரியது . பாதிரியாராய் இருப்பவர்கள் பெரும்பாலும் உயர்சாதியினாராய் இருப்பதாலேயே இந்த பாகு பாட்டை தொடர்ச்சியாய் கையாண்டு கொண்டிருந்தார்கள்.
கீழ வெண்மெணி சம்பவங்களுக்குப்பிறகு கம்யூனிசமும் திராவிடர் கழகமும் சாதியமைப்பை எதிர்த்து எல்லா இடத்திலும் போராடத்தொடங்கின கால கட்டத்தில் , தொடர்ச்சியான சாதியமைப்பை முன்னிறுத்தும் பாதிரியார்களை கம்யூனிச கட்சியில் இருந்த மார்க்ஸின் அப்பா கண்டித்து கேட்கத்துவங்கினார். அவரின் மேல் பாதிரியார்கள் திருட்டு வழக்கை ஜோடித்து சிறைக்கு அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட 3 மாதங்கள் சிறை வாசத்திற்கு பின் சர்ச்க்கு வந்தவர், பாதிரியாரை எதிர்த்து கேட்க சண்டை சச்சரவாகி அவரை அடித்து துரத்தி வைத்திருக்கிறார்கள்.
கட்சியில் தொடர்ச்சியான போராட்டகள் குறித்தும் வழக்கு குறித்தும் பேசி விட்டு எதாச்சும் செய்யனும் தோழர், சாதியை கட்டிக்காக்கிற பாதிரியை எதாச்சும் செய்யனும் தோழர் என்றபடி வீட்டுக்கு போய் விட்டிருக்கிறார் மார்க்ஸின் அப்பா.
தன் தெருவில் இறந்த ஆதிதிராவிட கிழவனுக்கு ப்ரேயர் செய்ய அழைக்க போனவர்களை பாதிரியார் அவமரியாதை செய்து அனுப்பி வைத்ததை மார்க்ஸின் அப்பாவிடம் ஊர்க்காரர்கள் கூறியிருக்கிறார்கள்.
அடுத்த வாரத்தில் மீன் வாங்க புல்லட் வண்டியில் போன பாதிரியாரை அரிவாளால் வெட்டி விட்டார் மார்க்ஸின் அப்பா.
மருத்துமனையில் சேர்க்கப்பட்ட பாதிரியின் 4 விரல்கள் துண்டாடப்பட்டிருந்தன.மார்க்ஸின் அப்பா கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகள் சிறை கொண்டு செல்லப்பட்டார்.
4 ஆண்டுகளில் சர்ச்சின் பெஞ்சுகள் எல்லார்க்கும் பொதுவாய் மாற்றப்பட்டிருந்தன. சர்ச்சின் நிலங்கள் பெரும்பாலானா ஏழைக்கூலிகளுக்கு சிறிது பிரித்து தரப்பட்டிருந்தது. அந்த நிலத்தையோ வீட்டு மனையையோ மார்க்ஸின் அப்பா பெற்றுக்கொள்ளவில்லை.
http://www.thiruvilaiyattam.blogspot.in/2012/09/blog-post.html

Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Similar topics
» Tamil Nadu: Dalits have a tough time in Panampatti ( separate entrances to eateries for Dalits)
» Tamil Nadu: Dalit is first beaten up by non-dalits during a temple festival. When he asks for water, non-dalits urinate in his mouth.
» Tamil Nadu: It is not the 21st century for Tamil Dalits
» What Tamil Christians who go church in Saidapet pray for
» The Silent Control Of The Church On Tamil Politics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum