Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Periyar and dalits (Tamil content)

Go down

Periyar and dalits (Tamil content) Empty Periyar and dalits (Tamil content)

Post by Rishi Thu Oct 31, 2013 9:10 pm

“தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த (அந்த ஜாதியைக் குறிக்கும் விதமாக அவர் பயன்படுத்திய வார்த்தை வேறு) பெண்கள் ரவிக்கை போடுவதால்தான் துணி விலை ஏறி விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் தாழ்த்தப்பட்டவரெல்லாம் (அந்த ஜாதியைக் குறிக்கும் விதமாக அவர் பயன்படுத்திய வார்த்தை வேறு) படித்து விட்டதுதான்” என்று கூறினார்.

இப்படியெல்லாம் இவர் தாழ்த்தப்பட்ட மக்களை விமர்சனம் செய்தார். ஆனால், அவர்கள் தரப்பில் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்போமா? 

திராவிட இயக்கத்தின் பிரமுகரும், தி.மு.க. அமைச்சராக இருந்தவருமான டாக்டர் சத்தியவாணி முத்து சொல்கிறார். (எனது போராட்டம், செழியன் பதிப்பகம், பக்.(75,76))

“ஒரு முறை தந்தை பெரியார் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை பெரியார் திடலில் நடத்தினார். அப்போது அவர் முன்னாலேயே நான் பேசினேன்.

“பார்ப்பனரையும் பாம்பையும் கண்டால் பாம்பைக் கொல்லாதே, பார்ப்பனனைக் கொல்லு என்றீர்கள். உங்களால்தான் இப்படிச் சொல்ல முடிந்தது. அப்படிப் பேசிய உங்கள் பேச்சு, இன்றைக்கு உங்கள் முன் வீற்றிருக்கும் ஒரு சில சமுதாய சீர்திருத்த கருஞ்சட்டை வீரர்களுக்குத்தான் உயர்வை அளித்துள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் பழைய நிலையில்தான் இருக்கிறார்கள்.

“பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதத் தொல்லையும் தருவது இல்லை. பார்ப்பனரல்லாதார்தான் தாழ்த்தப்பட்ட மக்களைத் துன்புறுத்துவதாகத் தகவல் வந்து கொண்டு இருக்கிறது.

“நிலைமையைப் பார்த்தால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் இடையே நீங்கள் தொடங்கிய போராட்டத்தைப் போல் சூத்திரர், சூத்திரர் அல்லாதாருக்கிடையே போராட்டம் துவக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது எனப் பேசினேன்” என்கிறார் சத்திய வாணி முத்து.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum